Onetamil News Logo

மக்கள் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பேருந்து வசதி கேட்டு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்   கோரிக்கை மனு 

Onetamil News
 

மக்கள் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பேருந்து வசதி கேட்டு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்  கோரிக்கை மனு 


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 12 ; தூத்துக்குடியில்  ஆழ்வார்திருநகரி குருகாட்டூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெற்கு கோட்டூர், வடக்கு கோட்டூர், குட்டியழகனூர், தொட்டியன்குடியிருப்பு, ராஜாங்கபுரம் கிராம மக்கள் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.   அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை  மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி  கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்பொழுது மக்கள் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர்.அதில் கூறியதாவது...
 எங்கள் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களது முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி, நாசரேத், சாயர்புரம், நாலுமாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். நாங்கள் பிரதான சாலைக்கு செல்ல வேண்டுமென்றால் தென்திருப்பேரை அல்லது ஏரலுக்கு செல்ல வேண்டும். இந்த 2 ஊர்களுக்கும் செல்வதற்கு வசதியாக 2 மினிபஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் ஒரு மினிபஸ் எங்கள் ஊர் வழியாக செல்வது இல்லை. ஆகையால் அரசு அனுமதி அளித்த வழித்தடத்தில் 2 மினிபஸ்களும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo