Onetamil News Logo

தூத்துக்குடி ஸ்மார்ட்சிட்டி கோப்புகள் மாயம்;உண்மைத் தகவல்கள் பரபரப்பு 

Onetamil News
 

தூத்துக்குடி ஸ்மார்ட்சிட்டி கோப்புகள் மாயம்;உண்மைத் தகவல்கள் பரபரப்பு 


தூத்துக்குடி,  2019 ஜூலை 20 ;வளர்ச்சியை முன்னெடுக்கும் நிகழ்வுகளாக மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஸ்மார்ட் நகரங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படுவதாக வெளியிட்டுள்ளது. அதன் படி தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி கோப்புகள் ஏற்படுத்தப்பட்டது.அதிலுள்ள ஆவணம் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்மார்ட் சிட்டியின் நோக்கம் பொருளாதார வளர்ச்சி, ஆட்சியை வலுப்படுத்துதல், நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் என கூறுகிறது. 
உலக வங்கி (WB), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA), ஐக்கிய நாடுகளின் தொழில் வளர்ச்சி அமைப்பு (UNIDO) போன்ற பன்னாட்டு அமைப்புகளிடம் இருந்து கடனை வாங்கி, அதனுடன் நம் மாநில அரசிடம் இருந்து மக்கள் வரிப்பணத்தை வாங்கி, பல்வேறு நகராட்சிகளுக்கான திட்ட நிதியை வாங்கி, நம் நாட்டில் மற்றும் வெளிநாட்டில் உள்ள பெரும் தொழில் நிறுவனங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும், உயர் மற்றும் உச்ச நீதி மன்ற சட்ட சேவை நிறுவனங்களும் லாபகரமான தொழில் நடத்த, ஒப்பந்தம் முறையில் இந்திய நகரங்களில் வாழும் மக்களின் அடிப்படையான சேவை என்னும் பெயரில், மக்களிடமே மொத்தமாகவும், சிறுக சிறுகவும் பணத்தை செலுத்தச் சொல்லும் திட்டம்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், எந்த சேவை உங்களுக்கு தேவை என்பதை மட்டும் மக்களிடம் ஆலோசனையாக பெறப்படுகிறது. 
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான சில கோப்புகள் மாயமானதாக தகவல்கள் வெளியானது. இதனால் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலனிடம் கேட்ட போது, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.8 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான கோப்புகள் எங்கு வைக்கப்பட்டு உள்ளது என்பது தெரியவில்லை. அந்த கோப்புகள் 3 நாட்களுக்குள் கண்டுபிடிக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அலுவலருக்கு நோட்டீசு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த கோப்புகள் காணாமல் போனாலும் எந்த பாதிப்பும் இல்லை. அந்த கோப்புகள் முழுமையாக கம்ப்யூட்டரில் உள்ளது.மேலும் தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த ஞானசேகரன் கிழக்கு மண்டலத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த ஒரு மாதமாக அவர், கோப்புகளை ஒப்படைக்காமல் உள்ளார். இதனால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்” என்று கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo