Onetamil News Logo

விதிமுறைகளை மீறி பணிகளை மேற்கொள்ளும் தனியார் காற்றாலை மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் நள்ளிரவில் போராட்டம்

Onetamil News
 

விதிமுறைகளை மீறி பணிகளை மேற்கொள்ளும் தனியார் காற்றாலை மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் நள்ளிரவில் போராட்டம்


 

தூத்துக்குடி  2018 டிச2 ;  விதிமுறைகளை மீறி பணிகளை மேற்கொள்ளும் தனியார் காற்றாலை மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் நள்ளிரவில் போராட்டம்
கயத்தாறு பகுதியில் விதிமுறைகளை மீறி காற்றாலை அமைத்துவரும் தனியார் காற்றாலை நிறுவனத்தைக் கண்டித்து வடக்கு இலந்தை குளம் கிராம மக்கள் கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 கயத்தாறு வட்டம் வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் தனியார் (சுஸ்லான்) காற்றாலை நிறுவனம் விதிமுறைகளை மீறி நிலபுரோக்கர்களை வைத்து விவசாயிகளை மிரட்டியும் போலியான ஆவணங்களை தயாரித்து நிலங்களை கிரையம் வாங்கி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். 
மேலும், அரசு நிலங்களை நீர் வழித்தடங்களை சேதப்படுத்துவமான அராஜக செயல்களை தொடர்ந்து செய்து வந்தனர். இதனால் வடக்கு இலந்தைகுளத்தில் கடந்த ஆக.15 மற்றும் அக்.2-ம் தேதிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில் காற்றாலை நிறுவனத்துக்கு எதிராகவும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அரசு அதிகாரிகளுக்கும் எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதே போல், வடக்கு இலந்தைகுளத்தை சேர்ந்த முருகன் என்பவர் தனியார் காற்றாலை நிறுவனத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிப்பேரணை மனு  தாக்கல் செய்தார். அதில், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும கிராம பஞ்சாயத்து ஆகியவற்றில் விண்ணப்பம் செய்து, அவர்களிடம் சட்டப்படி அனுமதி பெற்ற பின்னரே காற்றாலை நிறுவனம் பணிகளை தொடங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அந்த நிறுவனம் உயர்நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்திவிட்டு வடக்கு இலந்தைகுளம் பகுதியில் தனது பணிகளை செய்து வருகிறது. இதற்கு கயத்தாறு அதிகாரிகளும்  உறுதுணையாக உள்ளனர். அவர்களது சட்டவிரோத செயல்களை தட்டிக்கேட்கும் நபர்கள் மிரட்டப்படுகின்றனர்.
காற்றாலை நிறுவனம் கடந்த 17-ம் தேதி காட்டாற்று ஓடையில் தடுப்பணையை மூடி பாதை அமைத்ததை தட்டிக்கேட்ட துரைமுருகன் என்பவர் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறும் காற்றாலை நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை மதிக்காமல் செயல்படும் காற்றாலை நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள், ஆதரவாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 19ந்தேதி கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் தொடர்ச்சியாக வடக்கு இலந்தைகுளம் கிராம மக்கள் காற்று ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தனியார் காற்றாலை நிறுவனம் இரவில் சட்ட விதிமுறைகளை மீறி காற்றாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், அந்த நிறுவனத்திற்கு அரசு அதிகாரிகள் உறுதுணையாக இருப்பதாகவும், தனியார் காற்றாலை நிறுவனம் மீது நடவடி எடுக்க வலியுறுத்தி வடக்கு இலங்கை குளத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் காற்றாலை நிறுவனம் காற்றாலை அமைக்கும் பணியை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். மேலும் இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo