Onetamil News Logo

 நாங்குநேரி விக்கிரபாண்டி தேர்தல் புறக்கணிப்பு ;வளரும் தமிழகம் கட்சி நிறுவனர் பூ.துரை அரசன், மாநில ஒருங்கிணைப்பாளர் காந்தி மள்ளர்  இணைந்து வெளியிடும் அறிக்கை 

Onetamil News
 

நாங்குநேரி விக்கிரபாண்டி தேர்தல் புறக்கணிப்பு ;வளரும் தமிழகம் கட்சி நிறுவனர் பூ.துரை அரசன், மாநில ஒருங்கிணைப்பாளர் காந்தி மள்ளர்  இணைந்து வெளியிடும் அறிக்கை     


தூத்துக்குடி 2019 அக்டோபர் 10 ;நாங்குநேரி விக்கிரபாண்டி தேர்தல் புறக்கணிப்பு ;வளரும் தமிழகம் கட்சி நிறுவனர் பூ.துரை அரசன், மாநில ஒருங்கிணைப்பாளர் காந்தி மள்ளர்  இணைந்து வெளியிடும் அறிக்கையில் கூறியதாவது....
இதுகுறித்து அறிவிப்பு ;தமிழகத்தில் தற்பொழுது நடைபெறும் விக்கிரபாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலை  வளரும் தமிழகம் கட்சி புறக்கணிக்கிறது. தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சுமார் 1 கோடி 5 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். இந்த மக்கள் 7 உட்பிரிவுகளில் இருக்கிறார்கள். இந்த 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைந்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க அரசாணை வெளியிட வேண்டி கடந்த பல வருடமாக போராடி வருகிறார்கள். இந்த மக்களின் கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்ற தவறிவிட்டது. தேர்தல் நேரத்தில் மட்டும் சில அறிவிப்புகளை வெளியிட்டு ஏமாற்றி வருகிறது. இந்த ஏமாற்றத்தை மக்கள் நம்பவில்லை. எனவே மாநில அரசு உடனே தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும். 
மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து பட்டியல் வெளியேற்றம் கோரிக்கை ஏற்று அரசாணை வெளியிட வேண்டும். இது நடைபெறும் வரை தேர்தல் புறக்கணிப்பு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும். தமிழகத்தில் மொத்த மக்கள் தொகை 7.30 கோடி ஆகும். இதில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சுமார் 1 கோடி 5 லட்சம் பேர் இருக்கிறார்கள். தமிழகத்தில் 30 அமைச்சர்கள் இருந்து வருகிறார்கள். இதில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச்சேர்ந்த ஒருவர் மட்டும் மந்திரியாக இருந்து வருகிறார். அவரும் சப்பை மந்தியான ஆதிதிராவிட நல மந்திரியாக இருக்கிறார். இந்த சமூகம் பல்வேறு துறைகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலை வாய்ப்புக்களில் சுமார் 1 லட்சம் காலி பணியிடம் நிரப்பபடாமல் உள்ளது. இதை மத்திய அரசும் மாநில அரசும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. 
எனவே காலி பணியிடங்களை நிரப்ப வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மந்திரிகள் பதவியில் சமூக நீதி பின்பற்ற வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்குநேரி தேர்தல் புறக்கணிப்பு தொடர்ந்து நடைபெறும். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo