Onetamil News Logo

100 சதவீதம்; வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் இருசக்கர வாகனத்தை ஓட்டி ;கலெக்டர்,எஸ்.பி பங்கேற்பு

Onetamil News
 

100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் இருசக்கர வாகனத்தை ஓட்டி ;கலெக்டர்,எஸ்.பி பங்கேற்பு


தூத்துக்குடி 2019 மார்ச் 15 ; நடைபெற உள்ள தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம்; வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் தூத்துக்குடி மாதாகோயில் இருந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, விழிப்புணர்வு பணிகளைமேற்கொண்டார்.
நடைபெற உள்ள தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம்; வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி இன்று (15.03.2019) நடைபெற்றது. தூத்துக்குடி மாதாகோயில் இருந்து விழிப்புணர்வு டி சர்ட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் /மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, விழிப்புணர்வு பணிகளைமேற்கொண்டார். இந்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியானது மாதாகோயில் இருந்து துவங்கி வி.வி.டி. சாலை, வ.உ.சி. கல்லூரி வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண் காவலர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்துகொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நமது மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும்,தேர்தல் அறிவித்த நாளில் இருந்து பறக்கும்படை அலுவலர்கள், நிலையான குழு அலுவலர்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு இடங்களில், கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று இருசக்கர வாகனம் பேரணி மாதாக்கோயில் இருந்து துவங்கி சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று நிறைவடைந்தது. நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் எந்த ஒரு பரிசு பொருட்களோ, பணமோ பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும். முதல்முறை வாக்களிப்பவர்கள் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயகத்தின் கடமையை நிலைநாட்ட வேண்டும். இதற்கு முன்பாக நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவுகள் குறைவான வாக்குச்சாடிகளை கண்டறியப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனவேநடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ  மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பேசினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ  மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள், நடைபெற உள்ள தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம்; வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வ.உ.சி. கல்லூரி முன்பாக கல்லூரி மாணவ, மாணவிகள் நிகழ்த்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியை பார்வையிட்டு,வாக்காளர்கள் தங்களது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் தவறாமல் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள், பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டினார். மேலும், இருசக்கர வாகன ஓட்டுபவர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், .,மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.அனு, ப., மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் பிரகாஷ், மாரியப்பன் (ஆயுதப்படை), தூத்துக்குடி வட்டாட்சியர் ஜாண்சன் தேவசகாயம், வட்டார போக்குவரத்து அலுவலர் மண்ணர் மண்ணன் மற்றும் அலுவலர்கள், காவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo