தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி. S.அமிர்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக்கூட்டம்
தூத்துக்குடி 2021 ஜன.27 ;தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வட்டார.நகர தலைவர்கள் ஆலோசனை கூட்டம்.தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர். ஊர்வசி. S.அமிர்தராஜ் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம் ; 1). தலைவர்.ராகுல் காந்தி அவர்களை. தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரை செய்ய அழைத்து வரவேண்டும். 2). ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது. 3). பெரும் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். 4). கனமழையால் தாமிரபரணி ஆற்றில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது ஊருக்குள் புகாதவாறு ஆற்றங்கரையில் ஸ்ரீவைகுண்டம் முதல் முக்காணி வரை இருபுறமும் தடுப்பு சுவர் கட்டவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. 5).அனைத்து கிராமங்களிலும் நகரங்களிலும் பெரும் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாக நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க வேண்டும். 6). கொரானா காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து பேருந்துகளும் சரியான வழி தடத்தில் சரியான நேரத்தில் இயக்கப்பட வேண்டும். 7).வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நமது வேட்பாளர் வெற்றிக்கு அனைத்து வட்டார நகர பூத் கமிட்டி நிர்வாகிகள் அயராது செயல்பட வேண்டும். 8). ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களை நேரில் சென்று பூத் கமிட்டி நிர்வாகிகள் சந்திக்கவேண்டும். 9). அனைத்து கிராமங்களிலும் காங்கிரஸ் பேரியக்கத்தை பலப்படுத்தும் வண்ணம் அனைத்து கிராமங்களிலும் காங்கிரஸ் கொடி கம்பம் அமைக்க வேண்டும்.10).ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர். ஊர்வசி.S. அமிர்தராஜ் அவர்களை. அறிவிக்க வேண்டும் என்று ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது. 11). கொடிய நோயான கொரோனா நோய் பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பகுதி மக்கள் அனைவருக்கும். நலத்திட்ட உதவிகள் செய்த. அப்போது தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை மாநில பொதுச் செயலாளர். ஊர்வசி. S.அமிர்தராஜ் -க்கு. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாராட்டுகள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர். ஊர்வசி அமிர்தராஜ் , மற்றும். துணைத் தலைவர்கள், விஜயராஜா , சங்கர் ,ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய கவுன்சிலர்.பாரத் ,வட்டார தலைவர்கள். ஸ்ரீவை கிழக்கு தலைவர். தாசன் , ஸ்ரீவை மேற்கு தலைவர். நல்லகண்ணு , கருங்குளம் வட்டாரத் தலைவர்.புங்கன் ,ஆழ்வார்திருநகரி மேற்கு வட்டார தலைவர். கோதண்டராமன், ஆழ்வார்திருநகரி கிழக்கு வட்டார தலைவர். பாலசிங் ,சாத்தான்குளம் வடக்கு வட்டார தலைவர். பார்த்தசாரதி ,மேற்கு வட்டார தலைவர். சக்திவேல் முருகன் ,தெற்கு வட்டார தலைவர். லூர்து மணி ,கிழக்கு வட்டார தலைவர்.V.M. சுதாகர் அவர்கள். அடுத்து திருச்செந்தூர் வட்டார தலைவர். சற்குரு ,உடன்குடி வட்டார தலைவர். துரைராஜ் ஜேக்கப் ,காயல்பட்டினம் வட்டாரத் தலைவர்.காஜிமுத்து வாஃப் ,இளைஞர் காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர். ஜெயசீலன் துரை , நகர தலைவர்கள். ஸ்ரீவைகுண்டம் நகர தலைவர். சித்திரை , பெருங்குளம் நகர தலைவர். மூக்காண்டி , சாயர்புரம் நகர தலைவர். ஜேக்கப் அவர்கள். ஏரல் நகரத் தலைவர். பார்க்கர் அலி , ஆழ்வார்திருநகரி நகரத் தலைவர். சதீஷ்குமார் அவர்கள். சாத்தான்குளம் நகர தலைவர். வேணுகோபால் , நாசரேத் நகரத் தலைவர்.சந்திரன் ,திருச்செந்தூர் நகர தலைவர். ராஜ்குமார் ,ஆத்தூர் நகர தலைவர். சின்னதுரை , காரணம் நகரத் தலைவர்.பாஸ்கர் ,தென்திருப்பேரை நகர தலைவர் சங்கர நாராயணன்,இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் இசை சங்கர் , ஸ்ரீவைஸ்ரீவைகுண்டம் ஊடக பிரிவு தலைவர்.மரியராஜ் ,வழக்கறிஞர் வில்லியம் பெலிக்ஸ் , டேவிட் பிரபாகர் , காங்கிரஸ் எடிசன் , சொரிமுத்து பிரபாகர்,முத்துமணி ,சிவகளை பிச்சையா , பிரவீன் துரை ,தெற்கு மாவட்ட செயலாளர் சந்தன குமார் , சந்திரன் , கட்டாரிமங்கலம் கணேஷ் ,ஜெபமாலை, அந்தோணி காந்தி ,நபப் ,. பாலாஜி ,ராஜன் , மற்றும். பலரும் கலந்து கொண்டார்கள்.