Onetamil News Logo

ஏரல் சூலை வாய்க்கால் பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Onetamil News
 

ஏரல் சூலை வாய்க்கால் பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


 தூத்துக்குடி 2020 நவம்பர் 18 ; தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சூலை வாய்க்கால் பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சூலைவாய்க்கால் பகுதியின் முக்கிய இடங்களில் பொதுமக்கள் சார்பில் புதிதாக நிறுவப்பட்ட 10 சி.சி.டி.வி கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது ஊராட்சி மன்ற தலைவர் வேங்கையன், ஊர் தலைவர் சூசையப்பர்  மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. முத்துலட்சுமி உள்ளிட்ட காவல்துறையினர் பலர் உடன் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo