Onetamil News Logo

தூத்துக்குடி அருகே கீழ ஈராலில் வரும் 14 ம் தேதி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் 

Onetamil News
 

தூத்துக்குடி அருகே கீழ ஈராலில் வரும் 14 ம் தேதி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் 


தூத்துக்குடி 2018 ஆகஸ்ட் 9; தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈராலில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் 14.8.2018 அன்று நடைபெறும் துடிசியா சங்கத்தலைவர் எஸ்.கணேசன்  தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 தமிழக முதல்வர் அவர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த பல திட்டங்களை அறிவித்துள்ளார்கள். மானியங்களுடன் கூடிய கடன் உதவி, ஈடு உத்திரவாத நிதியம் மற்றும் முயற்சி மூலதன நிதியம் போன்ற திட்டங்கள் அரசின் கொள்கையளவில் வடிவுபெற்றுள்ளன. இதன் ஒரு பகுதியாக சிறந்த தொழில்முனைவோர்களை கண்டறிய சென்னையிலுள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொழில் மற்றும் வணிகத் துறையின் மாவட்ட தொழில் மையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கத்துடன் (துடிசியா) இணைந்து 14.8.2018 செவ்வாய் காலை 9.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் தாலுகா, கீழஈராலில் (டான்பாஸ்கோ அரங்கம், அரசு மருத்துவமனை எதிரில்) ஒரு நாள் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது. சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண் பெண் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் முதற்கட்டமாக சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவுசெய்து எப்படி, தொழில் துவங்கவிருக்கும் முனைவோர்க்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும்.
                                                                                                                                               பயிற்சிமுகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.
அடுத்த கட்டமாக திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி, தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் அரசு வழங்கும் மான்ய திட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன்மூலம் நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். திட்டங்கள் மூலம் நிதி உதவி பெறும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியாளர்’ திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம். இப்பயிற்சிகளில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் மாவட்ட தொழில் மையங்களும் இணைந்து செயல்படும். எனவே, அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
                                                                                                                                                         மேலும் துடிசியாவில் நாள்தோறும் காலை 10.00 மணி முதல் மாலை 6.30 வரை புதிய தொழில், சேவை, வியாபாரம் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
                                                                                                                                                             மேலும் விபரங்களுக்கு: தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கம் (துடிசியா) 4/158, ராம் நகர், முவுஊ டிப்போ அருகில், எட்டையாபுரம் ரோடு, தூத்துக்குடி-2 / 0461-2347005 /9840158943 / 7708784867 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும் என துடிசியா சங்கத்தலைவர் எஸ்.கணேசன் தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo