Onetamil News Logo

90 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 111 இரு சக்கர வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா ;தூத்துக்குடி எஸ்.பி.முரளி ரம்பா ஆய்வு

Onetamil News
 

90 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 111 இரு சக்கர வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா ;தூத்துக்குடி எஸ்.பி.முரளி ரம்பா ஆய்வு  



தூத்துக்குடி 2019 ஜூன் 15 ;தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய  காவல் ஆய்வாளர்கள் உட்பட 53 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா,வெகுமதி வழங்கி பாராட்டினார்.
   
இன்று (15.06.2019) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கடந்த மே மாதத்திற்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் 90 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 111 இரு சக்கர வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா,  ஆய்வு செய்து, வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதன் பிறகு காவல்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கினார்.
மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர்  சுதேசன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பன், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்  ராமலெட்சுமி, சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணி உட்பட 53 காவல் ஆளிநர்களுக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா,  வெகுமதி வழங்கி பாராட்டினார்.     
இந்த ஆய்வுக்கூட்டத்தில்; காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள்  பொன்ராமு மற்றும்  வேதரத்தினம், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் பிரகாஷ், தூத்துக்குடி ஊரகம்  முத்தமிழ், திருச்செந்தூர் பாரத், சாத்தான்குளம்  பாலச்சந்திரன், ஸ்ரீவைகுண்டம் சகாய ஜோஸ், கோவில்பட்டி ஜெபராஜ், விளாத்திக்குளம் ஜெயக்குமார், மணியாச்சி  ரவிச்சந்திரன், மாவட்ட குற்றப்பிரிவு ரமேஷ், நில மோசடி தடுப்பு பிரிவு பால்துரை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு திரு. பழனிக்குமார், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் பூரணி,  ராகவேந்திரா கே ரவி, மற்றும் ஆயுதப்படை ஆய்வாளர்  மகேஷ் பத்மநாபன், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo