Onetamil News Logo

மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து: 2பேருக்கு போலீஸ் வலை!!

Onetamil News
 

மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து: 2பேருக்கு போலீஸ் வலை!!


தூத்துக்குடி 2019 மே 16:  தூத்துக்குடியில் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.தூத்துக்குடி அந்தோணியார்புரத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் ஜெயராஜ் (20), இவர் தனது  நண்பர்களுடன் பைபாஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தினாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் 2பேர் அவரை கத்தியால் குத்தினார்களாம். இதில் பலத்த காயம் அடைந்த ஜெயராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய 2பேரை தேடி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo