Onetamil News Logo

பட்டப்பகலில் மது போதையில் ரவுடியின் அடாவடி  ;திருச்சியில் போலீஸ்  ஏட்டுக்கு அரிவாள் வெட்டு.. 

Onetamil News
 

பட்டப்பகலில் மது போதையில் ரவுடியின் அடாவடி  ;திருச்சியில் போலீஸ்  ஏட்டுக்கு அரிவாள் வெட்டு.. 


திருச்சி  2019 ஜூலை 8 ;திருச்சி அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் ஹரிஹரன் (40). இவர் நேற்று மதியம் உக்கடை அரியமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் இருந்தார். அப்போது மீன்வியாபாரியான ரவுடி உக்கடை இஸ்மாயில் மெடிக்கலில் தகறாறு செய்வதாக தகவல் கிடைத்தது. அங்கு ஹரி சென்ற போது இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ரவுடி இஸ்மாயில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ஏட்டு ஹரியை  அரிவாளால் தலை மற்றும் கை ஆகிய இடங்களில் வெட்டினார். ஏட்டு ஹரியின் சத்தத்தை கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் ரவுடி இஸ்மாயில் ஓடி விட்டார்.படுகாயமடைந்த ஹரி சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏட்டு ஹரிஹரன் போலீஸ் யூனிபார்மில் இருக்கும் போது ரவுடி இஸ்மாயில் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பட்டபகலில் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு விழுந்த விவகாரம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo