Onetamil News Logo

தூத்துக்குடி ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் தசரா 7-ம் நாள் ;எஸ்.பி.அருண் பாலகோபாலன்  தலைமையில் சிறப்பு வழிபாடு 

Onetamil News
 

தூத்துக்குடி ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் தசரா 7-ம் நாள் ;எஸ்.பி.அருண் பாலகோபாலன்  தலைமையில் சிறப்பு வழிபாடு 


தூத்துக்குடி 2019 அக்டோபர் 6 ;தூத்துக்குடி குரூஸ்புரம் ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் தசரா ஏழாம் நாளான நேற்று வடபாகம் காவல் நிலைய மண்டகப்படி திருவிழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்  தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை பலப்படுத்தும் வகையில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் ஸ்ரீசந்தன மாரியம்மன் கோவில் தசரா திருவிழா ஏழாம் நாள் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய மண்டகப்படி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
அதே போன்று இந்த ஆண்டும் ஏழாம் நாள் திருவிழாவான நேற்று இரவு வடபாகம் காவல் நிலைய மண்டகப்படி திருவிழா ஸ்ரீ சந்தனமாரியம்மனுக்கு  விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது. 
பின் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது, இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், துவக்கி வைத்தார். 
இவ்விழாவில் தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர்  பிரகாஷ், வடபாகம் காவல் ஆய்வாளர் அருள், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், உதவி ஆய்வாளர் ரவிக்குமார், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பேச்சிமுத்து, போக்குவரத்துப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் வெங்கடேஷ், சிவக்குமார், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo