Onetamil News Logo

 மாற்றுத்திறனாளிகளுக்கு இனிவரும் காலங்களில் இணையதள சேவை வழியாக  மாத பராமரிப்பு உதவித்தொகை பட்டியல்கள் ; கலெக்டர் தகவல்

Onetamil News
 

மாற்றுத்திறனாளிகளுக்கு இனிவரும் காலங்களில் இணையதள சேவை வழியாக  மாத பராமரிப்பு உதவித்தொகை பட்டியல்கள் ; கலெக்டர் தகவல்


 தூத்துக்குடி 2019 ஜூலை 19 ;தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதம் ரூ.1500/- பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண் மற்றும் உரிய சான்றுகளை தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 31-07-2019 க்குள் ஒப்படைக்க வேண்டும் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதம் ரூ.1500/- பெறும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இனிவரும் காலங்களில் இணையதள சேவை வழியாக  மாத பராமரிப்பு உதவித்தொகை பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டு வங்கியின் மூலம் வழங்கப்படவுள்ளது.
எனவே நாளது தேதி வரை ஆதார் எண்ணை சமர்ப்பிக்காத பயனாளிகள் ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்), கிராம நிர்வாக அலுவலர் மூலம் பெறப்படும் வாழ்நாள் சான்று, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (அசல் மற்றும் நகல்), உதவித்தொகை பெற்று வரும் வங்கி கணக்கின் புத்தகம் (அசல் மற்றும் நகல்) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -2 (பாதுகாவலர் மற்றும் மாற்றுத்திறனாளி) ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பாதுகாவலர் மட்டும் 31-07-2019க்குள் நேரில் வந்து சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாற்றுத்திறனாளி நேரில் வரத்தேவையில்லை.  இத்தகவலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo