Onetamil News Logo

தூத்துக்குடியில் பிரசவத்தின் போது பெண் மரணமடைந்த சம்பவம் குறித்து சப்-கலெக்டர் விசாரணை 

Onetamil News
 

தூத்துக்குடியில் பிரசவத்தின் போது பெண் மரணமடைந்த சம்பவம் குறித்து சப்-கலெக்டர் விசாரணை 


தூத்துக்குடி 2021 ஜனவரி 15 ;தூத்துக்குடியில் பிரசவத்தின் போது பெண் மரணமடைந்த சம்பவம் குறித்து சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். 
தூத்துக்குடி புஷ்பா நகரைச் சேர்ந்தவர் திவாகர் இவரது மனைவி துர்கா தேவி (22). இந்த தம்பதியருக்கு திருமணமாகி 16மாதங்கள் ஆகிறது. நிறைமாத கர்ப்பினியாக இருந்த துர்க்காதேவி, பிரசவத்திற்காக தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை 9 மணியளவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக மாறியது. இதையடுத்து அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறினார்களாம். 
இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டிஎஸ்பி கணேஷ் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகி ஒன்றே கால் ஆண்டுகளில் பெண் உயிரிழந்துள்ளதால் இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி சார் ஆட்சியர்  சிம்ரான் ஜித் சிங் கலோன் மேல் விசாரணை நடத்தி வருகிறார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo