Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் மேளம், நாதஸ்வரம், தப்பாட்டம், நாட்டுப்புற கலைஞர்கள்  உட்பட 2000க்கும் மேற்பட்டகலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி? பரபரப்பு 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் மேளம், நாதஸ்வரம், தப்பாட்டம், நாட்டுப்புற கலைஞர்கள்  உட்பட 2000க்கும் மேற்பட்டகலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி? பரபரப்பு 


தூத்துக்குடி 2020 மே 23;தூத்துக்குடி மாவட்டத்தில் மேளம், நாதஸ்வரம், தப்பாட்டம், நாட்டுப்புற கலைஞர்கள்  உட்பட 2000க்கும் மேற்பட்டகலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி? பிச்சையெடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேளம், நாதஸ்வரம், தப்பாட்டம்  நாட்டுப்புற கலைஞர்கள் உட்பட  2000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில் 1000க்கும் மேற்பட்டோர் நல வாரியத்தில் பதிவு செய்யவில்லை இதனால் அவர்களுக்கு எந்தப்பலனும் பெறாமல் இருக்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் எவ்வித கொண்டாட்டங்களும் நடைபெறவில்லை என்பதால் நாட்டுப்புறகலைஞர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டுப்புறக்கலைஞர்களின் முக்கிய சீசன் காலத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களின் வாழ்வாதரம் முற்றிலுமாக முடங்கி போய் உள்ளது. மற்ற துறைகளுக்கு அரசு வழங்கும் நிவாரணம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்பது ஏமாற்றம் அளிப்பதாகவும், எனவே அரசு எங்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும், ஒருவேளை உணவிற்கே கஷ்டமான சூழ்நிலையில் தங்களுடைய குடும்பம் உள்ளதாகவும், விழாவிற்கு வாங்கிய அட்வான்ஸ் பணத்தினை திரும்ப கொடுக்கும் சூழ்நிலை உள்ளதால் அரசு தங்களின் நிலையை கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கடலையூர் சாலையில் ஒன்று திரண்ட 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நாதஸ்வரக் கலைஞர் மாரியப்பன் தலைமையில் தங்கள் வாத்தியங்களை வாசித்து நூதன முறையில் அரசுக்கு தெரிவித்தனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo