Onetamil News Logo

அலுவலக பணிக்கு காலதாமதமாக வரும் வட்டாச்சியர் அலுவலக ஊழியர்கள் ;பொதுமக்கள் வேதனை 

Onetamil News
 

அலுவலக பணிக்கு காலதாமதமாக வரும் வட்டாச்சியர் அலுவலக ஊழியர்கள் ;பொதுமக்கள் வேதனை       


 ஓட்டப்பிடாரம் ஜனவரி 11 ;
அலுவலக பணி நேரத்தில் வராமல் இஸ்டத்திற்க வரும் வட்டாச்சியர் அலுவலக ஊழியர்களால் பொதுமக்கள் வேதனை கண்டு கொள்ளாத தாசில்தார்.
 ஓட்டப்பிடாரம் தாலுகா மிகப்பெரிய வருவாய் வட்டம் மானாவாரி விவசாயிகள் நிறைந்தது. 61 பஞ்சாயத்துகளை உள்ளடக்கியது. நாள்தோறும் பட்டாமாறுதல் முதியோர் பென்சன் ரேஷன், சான்றிதழ்கள் உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்காக நூற்றுக்கனக்கானோர் வந்து செல்கின்றனர்.
  பொதுவாக விவசாயிகள் தங்கள் விவசாயபணிகளை நிறுத்திவிட்டு காலையிலே வந்தால் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ்களை பெற்றுவிடலாம் என நினைத்து வந்தால் அலுவலகத்தில் ஊழியர்கள் இருப்பதில்லை 9.30மணிக்கு வர வேண்டியவர்கள் 11மணிக்கு பணிக்கு வந்தால் எப்படி என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஊழியர்கள் வருகை இன்று நேற்று அப்படி அல்ல நாள்தோறும் ஓட்டப்பிடாரம் தாசில்தார் அலுவலக ஊழியர்களின் குறித்த நேரத்தில் வருவதில்லை என்பது பொதுமக்களின் புகார்.
இது குறித்து அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த கப்பிகுளத்தை சேர்ந்த பாபு கூறும்போது :
ஓட்டப்பிடாரம் தாசில்தார் அலுவலகத்தில் பயோமெட்ரிக்மிஷின் பொருத்தப்பட வேண்டும். இதே அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் இரயில் வண்டிக்கு செல்லும் போது முன்கூட்டியே சென்றுவிடுகின்றனர் ஆனால் பணிக்கு தாமதமாக வருகிறார்கள். எந்த பணி எடுத்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ரூபாய் பத்தாயிரம் கொடுத்தால் யாருடைய நிலத்திற்கும் கள்ளபட்டா போடலாம், ரூபாய் ஐந்தாயிரம் கொடுத்தால் பென்சன். இதுதான் நிலை தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் குறித்த நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை; ஊழியர்கள் எப்படி வருவார்கள். இங்கு நடக்கும் கூத்து மாவட்ட ஆட்சியர் வரை புகார் மனு அளித்தும் பயன் இல்லை.
இனிமேலாவது குறித்த நேரத்தில பணிக்குவராத ஊழியர்கள் மீது மாவட்ட ஆட்சியர் கண்காணித்து துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo