Onetamil News Logo

ரூ. 2 லட்சம் போலி கிருமி நாசினி தயாரித்த 2 பேர் மீது தூத்துக்குடியில் வழக்குப்பதிவு  ;தூத்துக்குடி ஊரக  டி.எஸ்.பி.கலைக்கதிரவன் பார்வையிட்டு விசாரணை 

Onetamil News
 

ரூ. 2 லட்சம் போலி கிருமி நாசினி தயாரித்த 2 பேர் மீது தூத்துக்குடியில் வழக்குப்பதிவு  ;தூத்துக்குடி ஊரக  டி.எஸ்.பி.கலைக்கதிரவன் பார்வையிட்டு விசாரணை 


தூத்துக்குடி 22 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை  ;ரூ. 2 லட்சம் போலி கிருமி நாசினி தயாரித்த 2 பேர் மீது தூத்துக்குடியில் வழக்குப்பதிவு  ;தூத்துக்குடி ஊரக  டி.எஸ்.பி.கலைக்கதிரவன் பார்வையிட்டு ஆய்வு  செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இதனை பயன்படுத்தி தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எந்தவித உரிமமும் பெறாமல் கிருமி நாசினி தயாரிக்கப்படுவதாக தூத்துக்குடி வருவாய்த் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது முத்தம்மாள் காலனி 5-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலி கிருமி நாசினி தயாரித்து வைத்திருந்ததும், அதை தயாரிக்க தேவையாக பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ .2 லட்சம் ஆகும். இது தொடர்பாக வருவாய்த்துறையினர் தூத்துக்குடி அருகே உள்ள கீழமுடிமன் பகுதியை சேர்ந்த ஜான் கிஷோன், ஜான் பெனடிக் ஆகிய 2 பேரை பிடித்து தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி ஊரக  டி.எஸ்.பி.கலைக்கதிரவன் பார்வையிட்டு விசாரணை   செய்துவருகிறார். விசாரணையின் போது சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் முத்து சுப்ரமணியன் உடன் இருந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo