Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை எஸ்.பி.அருண் பாலகோபாலன், ஆய்வு செய்தார்.

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை எஸ்.பி.அருண் பாலகோபாலன், ஆய்வு செய்தார். 


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 18 ; தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், ஆய்வு செய்தார். 
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் பயன்பாட்டில் உள்ள 160 இரு சக்கர வாகனங்கள், 126 நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என ஆய்வு மேற்கொண்டார். 
பழுதடைந்துள்ள வாகனங்களை, பழுது நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அறிவுரை வழங்கினார். 
மேலும் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசிக்கொண்டு ஓட்டக்கூடாது எனவும், சாலை விதிகளை கடைபிடித்து எவ்வித வாகன விபத்தும் ஏற்படாமல் வாகனம் ஓட்டவேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். 
இந்த ஆய்வின்போது ஆயுதப்படை பொறுப்பு தூத்துக்குடி மாநகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பாலமுருகன், ஆயுதப்படை ஆய்வாளர் மகேஷ் பத்மநாபன்,  மோட்டார் வாகனப்பிரிவு உதவி ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo