Onetamil News Logo

செக்காரக்குடி அரசு பள்ளியில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் 

Onetamil News
 

செக்காரக்குடி அரசு பள்ளியில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் 


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 10 ;தேசிய ஆயுஷ் பணிக்குழு மற்றும் மாநில ஆயுஷ் செயல்திட்டக்குழு சார்பில், தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் யூனியனிலுள்ள பள்ளி மாணவ, மாணவியர்களிடத்தில் சித்த மருத்துவத்தின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் பொருட்டு வாரம்தோறும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி அறிவுறுத்தலின்பேரில் அரசு, தனியார் பள்ளிகளில் சிறப்பு சித்த மருத்துவ முகாம்களை வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவத்துறையினர் டாக்டர்.செல்வக்குமார் தலைமையில் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சித்த மருத்துவ சிறப்பு முகாம் கருத்தரங்கம் மற்றும் மூலிகை கண்காட்சி நடைபெற்றது. முகாமிற்கு, பள்ளி தலைமையாசிரியை கிளாரா அமுதராணி தலைமை வகித்தார். செக்காரக்குடி அரசு மருத்துவர் சுப்பையா பாண்டியன், பள்ளியின் கல்விக்குழு உறுப்பினர் காமராஜ், ஆசிரியை டல்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை ஐரின் விமலா வரவேற்றார்.
முகாமில், சித்த மருத்துவர் செல்வக்குமார் கலந்துகொண்டு பேசியதாவது, இன்றுள்ள கணினி உலகில் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து உடற்பயிற்சிகளை செய்யும் பழக்கம் என்பது பெரும்பாலானவர்களிடம் இல்லை. 
காலை உணவு உண்பதை பலரும் தவிர்த்து வருகின்றனர். இது முற்றிலும் தவறான செயலாகும். உணவினை எப்படி சாப்பிடவேண்டும், எப்படி சாப்பிடக்கூடாது என்று நமது முன்னோர்கள் அருமையாக விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி நாம் சாப்பிட்டாலே நோயின்றி நலமாக வாழலாம். பொதுவாக காலை உணவு நமது உடலுக்கு மிகவும் முக்கியமானதாகும். காலை உணவினை சரியான முறையில் சாப்பிட்டாலே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களும் வராமல் எளிதில் தடுத்து விடலாம். ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதை மட்டும் ஏனோ  நினைப்பதற்கு மறந்து விடுகிறோம். ''சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்'' என்பதை மாணவ, மாணவியர்களான நீங்கள் உணர்ந்துகொண்டு கேழ்வரகு, கம்பு, சோளம், கீரைகள், பாகற்காய், குதிரைவாலி போன்ற சத்தான உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம் என்பதை உறுதிமொழியாக ஏற்று 100ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்திடவேண்டும் என்றார்.
முன்னதாக சித்த மருத்துவ மூலிகைகளின் பயன்கள் குறித்து கண்காட்சி மூலமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. இதில், ஆசிரியை&ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் ராமசாமி நன்றி கூறினார்.
முகாமிற்கான ஏற்பாடுகளை வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் செல்வக்குமார் தலைமையில் சித்த மருத்துவ பிரிவினர் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo