Onetamil News Logo

அதிமுக,திமுக, காங்கிரஸ் கட்சியினர் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு அனுமதி அளித்தனர் ;போட்டு உடைத்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் பேட்டி   

Onetamil News
 

அதிமுக,திமுக, காங்கிரஸ் கட்சியினர் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு அனுமதி அளித்தனர் ;போட்டு உடைத்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் பேட்டி   


தூத்துக்குடி 2018 ஏப்ரல் 15 ;திமுக, அதிமுக, மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு அனுமதி அளித்தனர் போட்டு உடைத்த  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி வந்த மத்திய கப்பல்துறை மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..   எந்த திட்டமும் பாதிப்புகளை உருவாக்கும் என்று முன்னரே உணரும் போது அவற்றை ஆரம்பத்திலே தடுக்க வேண்டியது மக்கள் மற்றும் அரசின் கடமையாகும். இதனால் தான் நான்  ஸ்டெர்லைட் தொழிற்சாலை வேண்டாம் என்று தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகில் 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவன் நான். அப்பொழுது தூத்துக்குடி மக்கள் எனக்கு ஆதரவு தரவில்லை,ஆனால்  ஆயிரக்கணக்கான கோடிகளில் முதலீடு செய்த பின்னர், பாதிப்புகள் இல்லையென்று அரசு ஒப்புதல் கொடுத்து திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். அன்று என்னிடம் டீல் பேச அந்த நிறுவனம் ஆட்களை அனுப்பியது. நான் முடியாது என்று கூறிவிட்டேன். அதே நிலையில் தான் இன்றும் நான் கடைபிடித்து வருகிறேன்.                                                                                                                                                     
ஸ்டெர்லைட்  தொழிற்சாலைக்கு அன்று ஆட்சியில் இருந்த அதிமுக, திமுக, மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு அனுமதி அளித்தனர். ஸ்டெர்லைட் விசயத்தில் மாநில அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பதை பார்ப்போம்.
 பத்திரிக்கையாளர்களை மிஞ்சிய சக்தியாக இன்று வாட்ஸ் ஆப், பேஸ்புக் ஆகியவை திகழ்கிறது. அங்கீகாரமுள்ள  மீடியாக்களை கூட தங்கள் வலைக்குள் சிக்க வைக்கிறார்கள். உண்மை செய்திகளை வெளியிட்டு அதை தடுக்க வேண்டிய கடமை மீடியாக்களுக்கு உண்டு. காவலர்களை அடித்தால் என்ன தப்பு, பத்திரிக்கையாளர்களை அடித்தால் என்ன தப்பு என்று சில சமூக விரோதிகள், தலைவர்களாக வலம் வருகின்றனர். 
உண்மையிலே பாதிப்பு இருக்குமென்றால் அதை ஆய்வு செய்து தடுக்க வேண்டியது அரசின் கடமை. பாதிப்பு இல்லையென்றால் அதை மக்களிடம் தெளிவுபடுத்தி இது மக்களுக்கான அரசு எனபதனை நிருபிக்க வேண்டும் என்று கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo