Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலைத் துறையில் மானியம் பெற்று பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலைத் துறையில் மானியம் பெற்று பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்


தூத்துக்குடி,2020 செப்  19 ; தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலைத் துறையில் மானியம் பெற்று பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு  ;தூத்துக்குடி மாவட்டத்தி;ல் தோட்டக்கலைப் பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதனை மேலும் அதிகரிக்கும் பொருட்டு தோட்டக்கலைத் துறை மூலம் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றான ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2020-2021 ஆம் ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு 179 இலட்சம் உத்தேச இலக்கு பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் பழக்கன்றுகள் 140 ஹெக்டேர் மானியத்தில் (எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாளி, மாதுளை மற்றும் சப்போட்டா போன்றவை)  விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளன. 
பாரம்பரிய வகை பழப்பயிர்கள் மற்றும் காய்கறி வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.15,000/- வீதம் 20 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படவுள்ளது. கத்தரி, மிளகாய், மற்றும் தக்காளி நாற்றுகள் ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000/- வீதம் 37 ஹெக்டேருக்கும்  பாகல், வெண்டை, புடலை, தர்பூசணி, மற்றும் சுரைக்காய் போன்ற காய்கறி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.10,000/- வீதம்  70 ஹெக்டேருக்கும் மானியம் வழங்கப்படவுள்ளது. முருங்கை சாகுபடிக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000/- வீதம் 5 ஹெக்டேருக்கும் மற்றும் உதிரிப்பூக்கள் சாகுபடிக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.16.000/- வீதம் 10 ஹெக்டேருக்கும் மானியம் வழங்கப்படவுள்ளது.
பசுமைக்குடில் அமைக்கும் விவசாயிகளுக்கு சதுரமீட்டருக்கு ரூ.467.50 வீதம் 2000 சதுர மீட்டருக்கும்;, நிழல்வலைக்குடில் அமைக்கும் விவசாயிகளுக்கு ஒரு சதுரமீட்டருக்கு ரூ.355/- வீதம் 2500 சதுரமீட்டருக்கும், வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்கும் விவசாயிகளுக்கு ஒரு மெட்ரிக்டன் சேமிப்பு அளவு கொண்ட கிடங்கிற்கு ரூ.3,500/- வீதம் 1500 மெட்ரிக் டன் அளவுக்கும், மற்றும் சிப்பம் கட்டும் அறை அமைக்கும் விவசாயிகளுக்கு அறை ஒன்றிற்கு 2 இலட்சம் வீதம் 10 அறைகளுக்கும் மானியம் வழங்கப்பட உள்ளது. 
வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித் தோட்டத்தில் காய்கறி சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில் காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு, காய்கறி வளர்ப்பு பைகள், உயிர் உரங்கள் மற்றும் தென்னை நார் கழிவு ஆகியவை மானிய விலையில் வழங்கப்படும். வீட்டுத் தோட்டங்களுக்கு சொட்டுநீர்ப்பாசனம் மானியத்தில் வழங்கப்படவுள்ளது. 
      நிலப் போர்வை அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படஉள்ளது. தேனிப் பெட்டிகள் மற்றும் உபகரணங்களுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது. மண்புழு உரப்படுக்கை அமைப்பதற்கு ஒரு உரப்படுக்கைக்கு ரூ.25,000/- வீதம் 6 உரப் படுக்கைகளுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது. மேலும், காய்கறி பயிர் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ.2500/- வீதம் 1000 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படவுள்ளது. 
மேலும் நடமாடும்  விற்பனை வண்டி, அலுமினியம் ஏணி, தெளிப்பான்கள் ஆகியவை மானியத்தில் வழங்கப்பட உள்ளன. 
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப் பயிர்களை அடங்கலில் பதிவு செய்வதுடன், குடும்ப அட்டை நகல், அடங்கல், கணினி சிட்டா, புகைப்படம், ஆதார் அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் அனுபோகச் சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகலாம். மேலும், tnhorticulture.tn.gov.in  என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo