Onetamil News Logo

ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி வரலாற்றுத்துறை & வ.உ.சி கல்வியியல் கல்லூரி சார்பாக 2 நாட்கள் மென்பொருள் பயிற்சி குறித்து இணையவழி கருத்தரங்கம் 

Onetamil News
 

ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி வரலாற்றுத்துறை & வ.உ.சி கல்வியியல் கல்லூரி சார்பாக 2 நாட்கள் மென்பொருள் பயிற்சி குறித்து இணையவழி கருத்தரங்கம் 


தூத்துக்குடி2020 ஜூலை 11 ; ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி வரலாற்றுத்துறை மற்றும் வ.உ.சி கல்வியியல் கல்லூரி சார்பாக இரண்டு நாட்கள் மென்பொருள் பயிற்சி குறித்து இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. 
09.07.2020 மற்றும் 10.07.2020 ஆகிய இரண்டு நாட்கள் இணையவழி மூலமாக கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர், முனைவர்.ந.மீனாகுமாரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். வ.உ.சி கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர். த.கனகராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி, சென்னை, ஆங்கிலத்துரைப் பேராசிரியர் முனைவர். நாவுக்கரசி கோமதி , முதல்நாள் “சிறைப்பட்ட இறக்கைகள் மற்றும் நேர்மறை அம்சங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இரண்டாம் நாள் ‘புதிய இயல்புநிலை’ என்னும் தலைப்பில்; சிறப்புரை ஆற்றினார். இதன் மூலமாக மாணவர்களும், பொதுமக்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். இச்சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் என்று சிறப்பாக கூறினார். இந்நிகழ்வினை வ.உ.சி. கல்வியியல் கல்லூரி, கணிதத்துறை உதவிப்பேராசிரியர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், முனைவர் ச.தவசுபா அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்வின் இறுதியில் ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர்.லோ.சங்கீதா அவர்கள் நன்றியுரை கூறினார்கள். 
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை வ.உ.சி கல்வியியல் மற்றும் ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் அனைவரும் இணைந்து செய்திருந்தார்கள். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo