Onetamil News Logo

தூத்துக்குடி குரூஸ் பர்னாந்துக்கு சிலையை சுற்றி ஜெனோ ரவேல் தலைமையில் மேம்பாட்டு பணிகள்

Onetamil News
 

தூத்துக்குடி குரூஸ் பர்னாந்துக்கு சிலையை சுற்றி ஜெனோ ரவேல் தலைமையில் மேம்பாட்டு பணிகள்


தூத்துக்குடி 2019 நவம்பர் 13 ; தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வந்த தந்தை குரூஸ் பர்னாந்துக்கு சிலையை சுற்றி மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்றுவருகிறது.
தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வந்த தந்தை குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் மற்றும் அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட ஜெனோ இன்ஜினியரிங் ஒர்க்ஸ் உரிமையாளர் ஜெனோ ரவேல்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 
தூத்துக்குடி மாகராட்சி ஆவதற்கு கடந்த நூறாண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குடன் திட்டமிட்டு தூத்துக்குடி நகரை வளர்ச்சியடைய செய்த நகரின் தந்தை, குடிநீர் தந்தவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து. அவரது 150 வது பிறந்தநாள் விழா வரும் 15 மற்றும் 16 தேதிகளில் காெண்டாடப்படுகிறது.
இது குறித்து ஜெனோ இன்ஜினியரிங் ஒர்க்ஸ் உரிமையாளர் ஜெனோ ரவேல்  கூறியதாவது, ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து 150 வது பிறந்தநாள் வரும் 15 மற்றும் 16 தேதிகளில் காெண்டாடப்படுகிறது. 15 ம் தேதி அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகிறது. 
விழாவில் தூத்துக்குடியிலுள்ள அனைத்து சமூக பெரியவர்கள், பிரமுகர்கள்,  பரதர் நல அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு  கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo