Onetamil News Logo

பன்றி பண்ணை நடத்தியதில் ஏற்பட்ட தொழில் முன்விரோதம் ;கொலை முயற்சி தாக்குதல் ;2 பேர் கைது   

Onetamil News
 

பன்றி பண்ணை நடத்தியதில் ஏற்பட்ட தொழில் முன்விரோதம் ;கொலை முயற்சி தாக்குதல் ;2 பேர் கைது     


தூத்துக்குடி 2020 மே 19 ;பன்றி பண்ணை நடத்தியதில் ஏற்பட்ட தொழில் முன்விரோதத்தால் வாலிபர் மீது  கொலை முயற்சி ஆயுத தாக்குதல் :  2பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி, சுந்தரவேல்புரம் 7வது தெருவைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் இவரது மகன் சேசு மரியராஜா (30), இவரும் புதியம்புத்தூர் மேலமடத்தைச் சேர்ந்த ராமசாமி இவரது மகன் கருப்பசாமி (28) என்பவரும் இணைந்து  தட்டபாறையில் பன்றி பண்ணை தொழில் நடத்தி வந்தனர். இதில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு  இருவரும் பிரிந்தனர். இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் சேசு மரியராஜா தன்னை ஏமாற்றி விட்டதாக கருதி கருப்பசாமி அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.   
இந்த நிலையில் கருப்பசாமி அவரது  நண்பர்கள் தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ஆவுடையப்பன் காளிமுத்து , மணி ஆகிய மூவரும் சேர்ந்து, நேற்று மேலதட்டபாறையில் இருந்து பேரூரணிக்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த சேசு மரியராஜாவை வாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்துள்ள அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இதுகுறித்து தட்டபாறை காவல் உதவி ஆய்வாளர் மகாராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கருப்பசாமி, காளிமுத்து ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மணி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo