Onetamil News Logo

அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்படையான அறிக்கையாக  நாளிதழில் வெளியிட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக  மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 

Onetamil News
 

அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்படையான அறிக்கையாக  நாளிதழில் வெளியிட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக  மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 


தூத்துக்குடி 2019 செப் 17 ; தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக  மாவட்ட செயற்குழு கூட்டம் ;அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்படையான அறிக்கையாக  நாளிதழில் வெளியிட கோரிக்கை  விடுத்துள்ளனர். 
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக  மாவட்ட செயற்குழு கூட்டம்  தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது
இக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர்  மாவட்ட தலைவர் அ.யூஜின், மாநில அமைப்புச் செயலாளர் சற்குணரஜ் முன்னிலையில், மாவட்ட மகளிரணி செயலாளர்  மங்களாவதி ஜெய மர்ஜினா, மாவட்டசெயலாளர்மூக்கையா,  மாவட்ட பொருளாளர் ஜெகதீசன் மாவட்ட துணைத் தலைவர் சதீஷ்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெரால்டு மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதில்  (1) தீர்மானம்  2018 -19 கல்வி ஆண்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி முகாமில் பயிற்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு  இதுவரை பயிற்சிக்கான உழைப்பூதியம் கொடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது அதனை உடனடியாக கொடுப்பதற்கு முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
(2 ) 2019 மார்ச்மாதத்தில் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத  மாணவர்களுக்கான உடனடித்தேர்வுகள் நடத்தப்பட்டது. நடத்தப்பட்ட தேர்வு மையங்களில் பணியாற்றிய முதுகலை ஆசிரியர்களுக்கு இதுவரை உழைப்பூதியம்  வழங்காமல் நிலுவையில் உள்ளது. அதனை உடனடியாக வழங்க ஆவண  செய்ய முதன்மைக் கல்வி அலுவலரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

  ( 3 ) அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து வரும் பொருளாதாரத்தில்பின்தங்கிய, விளிம்புநிலை மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் சில அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரசு விதிகளுக்கு புறம்பாக காரணமின்றி கட்டணம் மொத்தமாக வசூல் செய்யப்படுகிறது.  இதற்கு உரிய காரணங்களை தெரிவிக்காமல் ரூ.500- 1000 என்று பல பள்ளிகளில் கட்டாயப்படுத்தி வசூல் செய்வதால் மாணவர்கள் பயந்து போய்  படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறுகின்றனர். அதனால் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்படையான அறிக்கையாக  நாளிதழில் வெளியிட வேண்டும்.மேலும் வசூல் செய்யப்படும் தொகைக்கு உரிய ரசீது வழங்கிடவேண்டும் என்று முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் அறிவுறுத்தவேண்டும்... இதன்மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்..இதனால் கூடுதலான கட்டணத்தை வசூல் செய்யும் பள்ளிகளிடையே ஒரு பயம் ஏற்படும் போது மாணவர்கள் இடைநிற்றல் குறைய வாய்ப்புண்டு  என்ற நோக்கில் முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளில் வசூல் செய்யவேண்டிய கல்விக்கட்டண பட்டியலை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 (4) நீட் தேர்வுக்கு பயிற்சி வழங்கக்கூடிய ஆசிரியர்களை ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி அடிப்படையிலேயே நியமனம் செய்ய வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் இப்பணிக்கு உட்படுத்த வேண்டும். குறிப்பிட்ட சில ஆசிரியர்களே மட்டும் ஒவ்வொரு ஆண்டும் அப்பணிக்கு உட்படுத்தும் போது தொடர்ச்சியாக பயிற்சி  மேற்கொள்ளும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தங்களுக்கு உரிய சனி ,ஞாயிறு விடுமுறை நாட்களை இப்பயிற்சிக்கு பயன்படுத்தி மாணவர் நலனை கருத்தில் கொண்டு பணியாற்றுகிறார்கள். அதோடு மட்டுமில்லாமல் தான் பணியாற்றக்கூடிய  பணியாற்றக்கூடிய  பள்ளியில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சியை கருத்தில் கொண்டு அதற்காகவும் சிறப்பு வகுப்புகள் எடுத்து, அவர்களை உற்சாகப்படுத்தி பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சியை வழங்கி வருகின்றனர். இச்சூழ்நிலையில் நீட் பயிற்சிக்கு குறிப்பிட்ட சில ஆசிரியர்களை மட்டும் மீண்டும் மீண்டும்  பயன்படுத்தும் போது அவர்கள் மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கு உட்படுகின்றனர்.  அவர்களை மீண்டும் மீண்டும் அப்பணிக்கு நியமிக்கப்படும் போது அதை தவிர்ப்பதற்கான தேவையற்ற காரணங்களை தேடி மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் . உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.ஆதலால் நீட்தேர்வு பயிற்சியை சுழற்சி முறையில் குறிப்பாக, பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் பயிலக்கூடிய பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை அப்பயிற்சிக்கு கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் ,மாவட்டத்தில்  அனைத்து ஆசிரியர்களையும் இப்பயிற்சிக்கு சுழற்சிமுறையில் உட்படுத்த வேண்டுமென்று அமைப்பின் சார்பாக வலியுறுத்துகின்றோம்.
மேற்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு கோரிக்கை மனுவானது நேற்று மாலை தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி அவர்களை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசப்பட்டது....

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo