Onetamil News Logo

தூத்துக்குடியில் கத்தோலிக்க சாமியாருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி ;இன்னாசியார்புரம் பகுதியின் முக்கிய சாலை மூடப்பட்டுள்ளது. 

Onetamil News
 

தூத்துக்குடியில் கத்தோலிக்க சாமியாருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி ;இன்னாசியார்புரம் பகுதியின் முக்கிய சாலை மூடப்பட்டுள்ளது. 


தூத்துக்குடி 2020 மே 21 ; தூத்துக்குடியில் கத்தோலிக்க சாமியாருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி ;இன்னாசியார்புரம் பகுதியின் முக்கிய சாலை மூடப்பட்டுள்ளது. 
தூத்துக்குடி இன்னாசியார்புரம் பிரான்சிஸ் சவேரியார் முதியோர் இல்லத்தின் ஓய்வு பெற்ற கத்தோலிக்க சாமியாருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள பிரதான சாலையான சேதுபாதை ரோடு, அமெரிக்கன் ஆஸ்பத்திரி சந்திப்பிலிருந்து டிஎஸ்எப் மீன் கம்பெனி வரை உள்ள முக்கிய சாலைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் வேறு நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இந்தப் பகுதி பொது மக்கள் வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தினர்.தூத்துக்குடி மாநகர சுகாதார அலுவலர் மருத்துவர் அருண்குமார் தலைமையில் சுகாதாரத்துறையினர் அந்தப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகர் பகுதியில் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   
தூத்துக்குடி கலவரத்தில் குண்டடி பட்டவர் தான்  தூத்துக்குடி, இன்னாசியார்புரத்திலுள்ள ஓய்வு பெற்ற குருக்கள் இல்லத்தில் இருக்கின்றார். அவருக்கு தற்போது கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குருக்கள் ஓய்வு இல்லம், சிறு மலர் குருமடம், திரு இருதய துறவற சபை அருள் சகோதரிகளின் தலைமையகம், புனித தோமையார் மேல்நிலைப் பள்ளி, புனித இன்னாசியார் மேல்நிலைப் பள்ளி, புனித இன்னாசியார் ஆலயம், புனித இனிகோ அச்சகம் மற்றும் தொழிற் பள்ளி ஆகிய இடங்கள் 21 நாள்களுக்கு தீவிர ஊரடங்குக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 
ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட அருள் தந்தையர், 8 அருள் சகோதரர்கள், 20க்கும் மேற்பட்ட அருள் சகோதரிகள் மற்றும் எண்ணற்ற பொது நிலையினர் இப்பகுதியில் உள்ளனர். மேலும், 25க்கும் மேற்பட்ட அருள் சகோதரிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பணியாற்றும் அமெரிக்கன் ஆஸ்பத்திரி என அழைக்கப்படும் திருஇருதய மருத்துவ மனையும் இப்பகுதியில் தான் உள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo