Onetamil News Logo

புராஜெக்ட் நியூ விங்ஸ் திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்கு அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை

Onetamil News
 

புராஜெக்ட் நியூ விங்ஸ் திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்கு அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை



தூத்துக்குடி 2019 ஜனவரி 13 ;தூத்துக்குடி மாவட்டத்தில் புராஜெக்ட் நியூ விங்ஸ் திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்கு அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறையினை மாவட்டஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் போதிட் ரீ நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்கு நடத்தும் புராஜெக்ட் நியூ விங்ஸ் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறையினை மாவட்டஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  தூத்துக்குடி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதியில்; பார்வையிட்டு மாணவியர்களுடன் கலந்துரையாடினார். 
பின்னர் மாவட்டஆட்சித்தலைவர் பேசியதாவது:- 
தூத்துக்குடி மாவட்டத்தில் புராஜெக்ட் நியூ விங்ஸ் திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு, ஆங்கிலம்,நேர்முகத்தேர்வு மற்றும் வாழ்க்கைத்திறன் மேம்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.  இந்த பயிற்சியின் ;மூலம் மாணவியர்களிடையே உள்ள அச்சத்தை போக்கி அவர்களின் திறமைகள் மேம்படுத்தப்படுகிறது.  மேலும்,மாணவியர்களின் திறன் மற்றும் தன்னம்பிக்கை வளர்ப்பதோடு,அவர்களின் லட்சியத்தைஅடைவதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.  மாணவியர்கள் இந்த பயிற்சிபட்டறையினை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தினந்தோறும் நாளிதழ்கள் படிக்கும் பழக்கத்தினை கடைப்பிடித்து அன்றாட நாட்டு நடப்புகளைதெரிந்துகொள்ளவேண்டும். எதிர்காலத்தில் லட்சியத்தைஅடையவிடாமுயற்சியுடன் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு உயர்ந்தநிலையை அடையவேண்டும் என பேசினார். 
பின்னர்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,99 மாணவியர்கள் தங்கியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியர் விடுதியில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டார். அப்போது,மாணவியர்களின் கோரிக்கையான கணிணி,தொலைக்காட்சி மற்றும் பிரிண்டர் ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் புராஜெக்ட் நியூ விங்ஸ் திட்டஒருங்கிணைப்பாளர்கள் அஷ்விதா, பிரவீணா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியர் விடுதிவார்டன் கலைச்செல்வி மற்றும் மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo