Onetamil News Logo

தூத்துக்குடியில் குடிநீர் குழாய் உடைப்பு ;மாநகராட்சி சரிசெய்யுமா? அமமுக 41வட்ட செயலாளர் நடிகர் காசிலிங்கம்  குற்றச்சாட்டு 

Onetamil News
 

தூத்துக்குடியில் குடிநீர் குழாய் உடைப்பு ;மாநகராட்சி சரிசெய்யுமா? அமமுக 41வட்ட செயலாளர் நடிகர் காசிலிங்கம்  குற்றச்சாட்டு 



தூத்துக்குடி  2019 அக்டோபர் 9 ;தூத்துக்குடி அண்ணாநகர் 3வது தெருவில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் வீணாக குடிநீர் சென்று கொண்டு இருப்பதை, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக அமமுக 41வட்ட செயலாளர் நடிகர் காசிலிங்கம்  குற்றம் சாட்டினார். 
தூத்துக்குடி, அண்ணாநகர் பிரதான சாலையில் 3வது தெருவில் செல்லக்கூடிய மாநகராட்சி குடிநீர் குழாய் ஆனது உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே குடிநீர் விநியோகம் வரும் சமயத்தில், குழாயின் உடைப்பு வழியாக குடிநீரானது வீணாக சாலைகளில் செல்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு உரிய தகவல் வழங்கியும்,கோரிக்கை விடுத்தும்  இதுவரை தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், மிகவும் அலட்சியமாக மெத்தனப்போக்கோடு மாநகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo