Onetamil News Logo

நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் பாஸ்ட் புட் ,குளிர்பானங்கள், பதப்படுத்திய ரசாயன கலப்புள்ள பொறித்த உணவுகளை தவிர்ப்பது, மிக மிக நல்லது 

Onetamil News
 

நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் பாஸ்ட் புட் ,குளிர்பானங்கள், பதப்படுத்திய ரசாயன கலப்புள்ள பொறித்த உணவுகளை தவிர்ப்பது, மிக மிக நல்லது 


தூத்துக்குடி  2020 ஜூலை 13 ;கொரோனா  வைரஸ் சற்று சிக்கலானது தான். அது, உருவாக்கி வரும் காய்ச்சல் மற்றும் மரண அபாயங்களை தடுக்கும் வழிகளை ஆராயலாம். இந்தக் காய்ச்சலை பொதுவாக சித்தர்கள், 'ஊழிப்பெருங்காய்ச்சல்' என, குறிப்பிடுகின்றனர்.பருவ கால மாற்றங்கள், இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள், உணவு குற்றங்கள், சுகாதார சீர்கேடுகளால் மட்டுமின்றி, அசைவ உணவுகளின் எதிர் விளைவாலும், இத்தகைய வைரஸ் பாதிப்புகள், மனிதனை தாக்கும்.இந்த வைரஸ் உருவான நாடு சீனா. இந்த நாட்டு மக்கள், கடல் வாழ் உயிரினங் கள் முதல், பாம்பு வரையும், முதலை, குரங்கு போன்ற ஜீவராசிகளையும் உண்ணும் பழக்கம் உள்ளவர்கள்.
இந்த ஜீவராசிகளின் வாயிலாக, கொரோனா உருவாக வாய்ப்பு மிகுதி. எனவே, இந்த பாதிப்பு வராமலிருக்க முதல் தற்காப்பு, அசைவ உணவை அறவே கைவிட வேண்டும்.அதற்கடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி கொள்ளுதல் அவசியம். எந்த வைரசும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களை பற்றுவதில்லை.உணவை, நம் பாரம்பரிய வழிமுறைப்படி தினம் இரண்டு வேளையாவது, புதிதாக சமைத்து, இளம் சூட்டுடன் உண்பதே சிறந்த வழி. அதை விடுத்து, சமைத்த உணவை குளிர்சாதனப் பெட்டியில் வாரக் கணக்கில் பாதுகாத்து, மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது, சுகாதார கேடாகும்.
அதேபோல, பாஸ்ட் புட் என்ற துரித உணவுகள், குளிர்பானங்கள், பதப்படுத்திய ரசாயன கலப்புள்ள உணவுகளை தவிர்ப்பது, மிக மிக நல்லது.                                                                                                                                            
                 அன்றாட உணவில் ரத்தத்தை வளப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் துாதுவளை, கற்பூரவல்லி, முசுமுசுக்கை, புதினா, கருவேப்பிலை போன்றவற்றில், ஏதாவது ஒன்றை துவையலாக்கி உண்பது நல்லது.பகலில் முருங்கை கீரை சூப், ஆவாரம் பூ கூட்டு, காரட், பீட்ரூட் வெங்காயம் சேர்த்த மோர் பச்சடி மிகவும் நல்லது.காலை, மாலையில் துளசி, 20 இலை, கிராம்பு, இரண்டு மிளகு, 10 துாள் செய்து, ஒரு குவளை கொதி நீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி, தேன், இரண்டு ஸ்பூன் கலந்து பருகுவது நுரையீரல், இதயம், மூளை ஆகியவற்றின் பாதுகாப்புக்கு கவசமாக விளங்கும்.
இரவில் படுக்கும் முன், பசும்பால் அரை டம்ளர், பூண்டு மூன்று பற்கள், மிளகு, 10 துாள் செய்து, மஞ்சள் பொடி மூன்று சிட்டிகை கலந்து, குங்குமப்பூ, 5 - 10 இதழ்கள் சேர்த்து பருகுவது, மிகச் சிறந்த ஆரோக்கிய கவசமாகும்.பப்பாளி, அன்னாசி, கொய்யா, ஆப்பிள், சப்போட்டா, மாதுளை போன்ற பழங்களை, அவ்வப்போது சாப்பிடுவது, தற்காப்பு நடவடிக்கையாகும்.
மாலை வேளைகளில், வீட்டில் மாவிலை, நொச்சி இலை, வேப்பிலை, யூகலிப்டஸ் இலைகளை உலர்த்தி, பொடி செய்து, சாம்பிராணியுடன் சேர்த்து புகைக்க, 10 நிமிடம் வீட்டினுள் இந்தப் புகையை மூலை முடுக்குகளில் பரவ விட்டால், எந்த வித வைரசும் அழியும்.இவை எல்லாம் தற்காப்பு முறைகள். இனி, மருத்துவ ரீதியாக, கொரோனா வைரஸ் நம்மை பாதிக்காத வகையில், சில மருந்துகளை சித்தர்கள், விஷக்காய்ச்சலை தடுக்கும் மூலிகை முறைகளாக, அந்த காலத்திலேயே கண்டறிந்து குறிப்பிட்டுள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo