சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்
தூத்துக்குடி 2021 பிப்ரவரி 22 ;தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் தலைமைறைவாக இருந்த எதிரி பாராத்ராஜ் என்பவரை கைது செய்த சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், முதல் நிலை காவலர் கண்ணன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கடந்த 19.02.2021 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயல்பட்டிணம் பகுதியில் வெட்டு சீட்டு விளையாடிய எதிரிகள் 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து பணம் ரூ. 1,17,000/- ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்ய உதவியாக இருந்த திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுந்தரம், தலைமை காவலர் திரு. இசக்கியப்பன் மற்றும் முதல் நிலை காவலர் திரு. சொர்ணராஜ் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
புதுக்கோட்டை காவல் நிலைய Women Missing வழக்கில் காணாமல் போன பெண்ணை பீகார் மாநிலம், தானாபூர் மாவட்டம் சென்று கண்டுபிடித்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெஞ்சமின், பெண் தலைமை காவலர் சுகிதா மற்றும் முதல் நிலை காவலர் கார்த்திகேயன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற 2 திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் இருவரை விரல் ரேகை மூலம் அடையாளம் காண உதவியாக இருந்த தனிவிரல் ரேகை பதிவு கூடம் உதவி ஆய்வாளர்கள் அருணாசலம், செல்வி. வைஜெயந்திமாலா மற்றும் தலைமை காவலர் திருமுருகன் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் நடை பெற்ற மணல் திருட்டு வழக்குகளில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்ய உதவியாக இருந்த எட்டையாபுரம் காவல் நிலைய தலைமை காவலர் சிவக்குமார், காவலர் வடிவேல் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
விளாத்திகுளம் காவல் நிலைய வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சிகளை துரிதமாக ஆஜர்படுத்தி கடந்த 18.02.2021 ம் தேதி 1 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 2,500/- அபராதம் கிடைக்க செய்த விளாத்திகுளம் காவல் நிலைய காவலர் மகேந்திரன் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
உதவி ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இப்பாராட்டு நிகழச்சியின்போது தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.