Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைக்கு செல்லும் தகுதியுள்ள மகளிர்கள் அம்மா இருசக்கர வாகனம் பெற  மாநகராட்சி நான்கு மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  தகவல் 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைக்கு செல்லும் தகுதியுள்ள மகளிர்கள் அம்மா இருசக்கர வாகனம் பெற  மாநகராட்சி நான்கு மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  தகவல் 


 தூத்துக்குடி 2018 ஜனவரி 10 ;தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைக்கு செல்லும் தகுதியுள்ள மகளிர்கள் அம்மா இருசக்கர வாகனம் பெற சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்திலும், பேரூராட்சி அலுவலகத்திலும், நகராட்சி அலுவலகத்திலும், மாநகராட்சி நான்கு மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தகவல் தெரிவித்துள்ளார் 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது... வேலைக்குச் செல்லும் மகளிர் எளிதாக சென்றுவர வசதியாக 50% (அதிகபட்சம் ரூ.25000/-) மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகன திட்டம்;; 2018-2019-க்கு இருசக்கர வாகனம் வழங்கிட அரசு அனுமதி அளித்துள்ளது.  இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்ய விரும்பும் ஓட்டுநர் உரிமம்/பழகுநர் உரிமம் பெற்ற வேலைக்குச் செல்லும் கீழ்க்கண்ட தகுதியுள்ள மகளிர் விண்ணப்பம் செய்திட விண்ணப்பப் படிவத்தினை ஊராட்சி பகுதிகளிலுள்ள மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்திலும், பேரூராட்சி பகுதியிலுள்ள மனுதாரர்கள் சம்பந்தபட்ட பேரூராட்சி அலுவலகத்திலும், நகராட்சி பகுதியிலுள்ள மனுதாரர்கள் சம்பந்தபட்ட நகராட்சி அலுவலகத்திலும், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலுள்ள மனுதாரர்கள் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும் மனுக்களை 08.01.2019 முதல் பெற்றுக் கொள்ளலாம்.  
விண்ணப்பதாரரின் தகுதிகள் :
1. நிறுவனப் பணியிலுள்ள மற்றும் முறைசாரா பணியிலுள்ள பெண்கள் 
2. கடைகள் மற்றும் இதர நிறுவனங்களிலுள்ள பெண்கள் 
3. அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள் , ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம்   மற்றும் மகமை அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் 
4. பெண் வங்கி ஒருங்கிணைப்பாளர்  மற்றும் பெண் வங்கி வழிநடத்துநர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார (பெண்) ஆர்வலர்கள். 
வயது வரம்பு வருமான வரம்பு மற்றும் இதர தகுதிகள் : 
18 முதல் 40 வயது வரையுள்ள இருசக்கர வாகனம் உரிமை பெற்றுள்ள பெண்கள் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- மிகாமல் இருக்க வேண்டும்.  
மனுவுடன் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் : 
1. பிறந்த தேதிக்கான சான்றிதழ் 
2. இருப்பிட சான்றிதழ்
3. உரிய  அலுவலரால் வழங்கப்பட்ட இருசக்கர வாகனம் உரிமம் நகல் அல்லது  இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமத்திற்கு மனு செய்துள்ளவர்கள்  நகல்  வைத்துள்ளவர்கள் தேர்வாகும் நிலையில் இருசக்கர வாகன உரிமம் நகல் சமர்பித்த பின்னரே மானியத் தொகை வழங்குவதற்குப் பரிசீலிக்கப்படும். 
4. வேலை வழங்கும் அலுவலரால் / நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் அல்லது சுய வருமான சான்றிதழ் 
5. நிறுவனத் தலைவர் / சங்கங்கள் மூலம் ஊதியம் பெறுபவர்களின் ஊதியச் சான்றிதழ். 
6. ஆதார்  அடையாள அட்டை (நகல்)
7. எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுள்ளவர்களின் சான்றிதழ்கள் (நகல்)
8. கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம்.
9. சாதி சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர்)
10. உரிய அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (நகல்)
11. இருசக்கர வாகனத்தின் விலைப்புள்ளி 
உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை மேற்கண்ட அலுவலகங்களில்; 18.01.2019 பிற்பகல் 5.00 மணி வரை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்  சந்தீப் நந்தூரி,  தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo