Onetamil News Logo

மாவட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர்; பணியிடத்திற்கு தகுதிவாய்ந்த நபர்கள் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

Onetamil News
 

மாவட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர்; பணியிடத்திற்கு தகுதிவாய்ந்த நபர்கள் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 


தூத்துக்குடி 2019 நவம்பர் 9 ;தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகு, மாவட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர்; பணியிடத்திற்கு தகுதிவாய்ந்த நபர்கள் 22.11.2019 விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிவிப்பு ;தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகு, மாவட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 5 (ஐந்து) அலுவலக உதவியாளர்; பணியிடங்களை நேர்காணல் மூலம் நியமனம் செய்ய கீழ்க்கண்ட விபரப்படி இனசுழற்சி மற்றும் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்; வரவேற்கப்படுகின்றன. அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களின் உரிய கல்வித் தகுதி மற்றும் இதர சான்றுகளின் சான்றொப்பமிடப்பட்ட ஒளி நகல்களுடன் 22.11.2019 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நேர்காணல் நடைபெறும் தகவல் தனியே கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். பரிசீலனையில் விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.
1. இனசுழற்சி விபரம்
1 ஆதி திராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) - (முன்னுரிமை பெற்றவர்
SC (Arunthathiyars preferential basis) -  Priority 
(அருந்ததியினரில் முன்னுரிமை பெற்றவர் இல்லாத நிலையில் அரசாணை நிலை எண்.541, ப.ம.நி.சீ.துறை, நாள்: 24.09.1989-ன் படி இந்த இடத்தில் அருந்ததியினருக்கென ‘முன்னுரிமை அற்றவர்” ஐ பரிசீலனை செய்யப்பட வேண்டும். அருந்ததியினர் எவரும் இல்லாத பட்சத்தில் இந்த இடம் ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்) பெண்/ ஆதரவற்ற விதவை 2012ஆம் ஆண்டு  நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில், தகுதியான நபர்கள் கிடைக்கப் பெறாததால் பின்னடைவு பணியிடமாக அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
2 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் (முன்னுரிமையற்றவர்)
MBC & DC - Non Priority  பெண்/ ஆதரவற்ற விதவை
3 பொதுப்போட்டி (முன்னுரிமையற்றவர்) General - Non Priority -
4 பிற்படுத்தப்பட்டோர்; (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர) - முன்னுரிமையற்றவர் 
BC (Other than BC Muslims) - Non Priority  -
5 பொதுப்  போட்டி(முன்னுரிமையற்றவர்) General - Non Priority -
2. கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
3. சிறப்புத் தகுதி: மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
4. ஊதிய கட்டு:  ரூ.15700 - 50000 (நிலை1)
5. வயது (01.07.2019 அன்று):
1 ஆதிதிராவிடர் அருந்ததியர்/ஆதிதிராவிடர் பழங்குடியினர் 18-35
2 இதர வகுப்பினர் 18 30
6. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : 
 மாவட்ட ஆட்சியர்,
 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு) ,
 இரண்டாம் தளம் - கோரம்பள்ளம் 
 தூத்துக்குடி. 628 101.
 (தொலைபேசி எண். 0461-2340579)
அலுவலக உதவியாளருக்கான விண்ணப்பப் படிவம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) அலுவலகத்திலும், தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளம் (National Career Service Portal) www.ncs.gov.in மற்றும் தூத்துக்குடி மாவட்ட இணையதளம்  www.thoothukudi.nic.in ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்:
1. தூத்துக்குடி மாவட்டத்தில்  வசிப்பவராக இருக்க வேண்டும்.
2. விண்ணப்பத்தாரர்கள் தங்களது கல்வித் தகுதி மற்றும் இதர சான்றிதழ்கள் நகலினை சான்றொப்பம் பெற்று விண்ணப்பதுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
3. விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என பரிசீலனையில் கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.
4. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்:  22.11.2019 அன்று மாலை 5.45 மணி
5. நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.
6. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விபரம் தனியே அஞ்சல்; மூலம் தெரிவிக்கப்படும்.
7. நியமனத்தை ரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும்  மாவட்ட ஆட்சியருக்கு உண்டு என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo