Onetamil News Logo

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் ;இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் பங்கேற்பு

Onetamil News
 

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் ;இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் பங்கேற்பு


தூத்துக்குடி 2020 செப்டம்பர் 16 ;தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில இணை அமைப்பாளர் கே.கே. பொன்னையா, மாநில நிர்வாக குழு உறுப்பினர் மாயக்கூத்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் நேற்று தூத்துக்குடி பிரையன்ட் நகர் 7வது தெரு சுந்தர வள்ளி திருமண மண்டபத்தில் வைத்து மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து குமார் தலைமையில் நடைபெற்றது. நெல்லை கோட்ட செயலாளர் ராகவேந்திரா, மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.ஆர். சரவணகுமார், மாநகர் மாவட்ட செயலாளர் மாதவன், மாநகர் மாவட்ட அமைப்பாளர் நாராயண ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுக்குழு விற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க வந்த இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார் இந்து முன்னணிக்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு பணியை துவங்கி வைத்து பேசினார். புதிய நிர்வாகிகளை மாநில இணை அமைப்பாளர் கே.கே. பொன்னையா அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் மாயக்கூத்தன், பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் மகேந்திரன், இந்து அன்னையர் முன்னணி துணைத் தலைவர் சிவகுமார், தூத்துக்குடி ஆட்டோ முன்னனி தலைவர் சிவலிங்கம், மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வினோத்குமார், மாநகர் மாவட்ட துணைத் தலைவர் மாரியப்பன்,  உட்பட திரளான இளைஞர்கள், இந்து  அன்னையர் முன்னணியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட புதிய பொறுப்பாளர்களாக மேற்கு மண்டல தலைவராக எம்.மூர்த்தி, தெற்கு மண்டல தலைவராக எம்.சி.எஸ். முருகன், கிழக்கு மண்டல தலைவராக தி.இசக்கிமுத்து, ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவராக சி.பி. சிபு ஆகியோர் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
இந்து முன்னணி பேச்சாளர் முத்தையாபுரம் ஆறுமுகம் நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo