Onetamil News Logo

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது, உணவு பாதுகாப்பு, தர நிர்ணய சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் 

Onetamil News
 

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது, உணவு பாதுகாப்பு, தர நிர்ணய சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் 


தூத்துக்குடி 2018 செப் 28 ;சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது, உணவு பாதுகாப்பு, தர நிர்ணய சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.                                                                                                                                                                                                                   தூத்துக்குடி விவிடி  அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சோலையப்பராஜா, தமிழரசன்  வெற்றிராஜன், ராஜா, வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், தெற்கு மாவட்ட தலைவர் ராமராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தார்.                                                                                                                                                                          பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பொன்ராஜ், வெங்கடேஷ்வரன், ஜெபஸ் திலகராஜ், ராஜம்  ஆகியோர் பேசினார்கள். தூத்துக்குடியில் வணிகர்கள் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருந்து கடை வணிகர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று 400க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.1கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 
ஆன்லைன்  மருத்து வணிகத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் மருந்து வியாபாரிகள் ,மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் நிர்வாகிகள் ராஜேஸ் கண்ணா, கண்ணன் திரளானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினார்கள். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo