Onetamil News Logo

தூத்துக்குடி அருகே பள்ளியில் ஆசிரியர் வெட்டி கொலை – பரபரப்பு 

Onetamil News
 

தூத்துக்குடி அருகே பள்ளியில் ஆசிரியர் வெட்டி கொலை – பரபரப்பு 


விளாத்திகுளம் 2019 ஜூலை 8 ;விருதுநகர் மாவட்டம் வதுவார்பட்டியை சேர்ந்த பால்பாண்டியன் இவரது மகன் வடிவேல்முருகன்(40). இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட  புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வளமையத்தில் சிறப்பு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டி ஆர்.சி.தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் கிரேஸி(29) என்பவருக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரோஸி ஏஞ்சல் (4) என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிரேசி தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து மகளுடன் விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டி ஆர்.சி. தெருவில் வசிக்கும் தன்னுடைய தந்தை ராஜமாணிக்கத்தின் வீட்டுக்கு சென்று விட்டார்.இந்த நிலையில்  அருப்புக்கோட்டை அருகே சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த பிரியா (28) என்ற இளம்பெண்ணுடன் வடிவேல் முருகனுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, பெண் குழந்தை உள்ளது. பிரியா தன்னுடைய கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக வாழ்கிறார். இதையடுத்து வடிவேல் முருகனும், பிரியாவும் புதூரில் வாடகை வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் வடிவேல் முருகனை மீண்டும் மனைவி கிரேசியுடன் சேர்ந்து வாழுமாறு பலமுறை மனைவியின் குடும்பத்தினர் கூறி வந்தனர். ஆனால் வடிவேல் முருகன் அதனை கண்டுகொள்ளவில்லை.
 காலையில் வழக்கம்போல் வடிவேல் முருகன் பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் மதிய உணவு இடைவேளையில் சாப்பிட சென்று விட்டு, மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு வந்தார். அப்போது கிரேசியின் தம்பியான என்ஜினீயர் அற்புதசெல்வன் என்ற ஆஸ்டின் (26) அங்கு வந்தார். அவர் தனது செல்போனில், வடிவேல் முருகனை தொடர்பு கொண்டு நேரில் பேச விரும்புவதாகவும், பள்ளிக்கூடத்துக்கு வெளியே வருமாறும் கூறினார்.
உடனே பள்ளிக்கூடத்துக்கு வெளியே வடிவேல் முருகன் வந்தார். அப்போது அங்கு நின்ற அற்புதசெல்வன், வடிவேல் முருகனிடம் தன்னுடைய அக்காள் கிரேசியுடன் மீண்டும் சேர்ந்து வாழும்படி கூறினார். ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அற்புதசெல்வன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென்று வடிவேல் முருகனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிகமான இரத்தம் வெளியேறி வடிவேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து, புதூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வடிவேல் முருகன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கு விஷயமாக  அற்புத செல்வம் என்ற ஆஸ்டினை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo