Onetamil News Logo

தூத்துக்குடியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: ஆசிரியர் கண்டித்ததால் விபரீத முடிவா? 

Onetamil News
 

தூத்துக்குடியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: ஆசிரியர் கண்டித்ததால் விபரீத முடிவா? 


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 20 ; தூத்துக்குடியில் 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஆசிரியர்  தண்டித்ததால் சுஜாதா (16) விபரீத முடிவு எடுத்ததாகக் கூறி பெற்றோர், கூறி  வருகின்றனர்.தூத்துக்குடி ராஜமன்னார் தெருவை சேர்ந்த கருப்பசாமி இவரது மகள் சுஜாதா (16). தூத்துக்குடி தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
 சுஜாதா (16) அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்த நிலையில் ஆசிரியர் திட்டியதாகத் தெரிகிறது. தொடர்ந்து  சுஜாதா (16)வை  கண்டித்து  தண்டித்ததாகக் கூறப்படுகிறது.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான  சுஜாதா (16) தொடர்ந்து வருத்தத்தில் இருந்துள்ளார். குடும்பத்தினரிடம் தனக்கு பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் மன அழுத்தத்துக்கு ஆளான சுஜாதா (16)  பெற்றோர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்  சுஜாதாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  சுஜாதாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து  சுஜாதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo