தூத்துக்குடியில் 350 நபர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை,திருக்குடும்ப தமிழ் நடுநிலையப்பள்ளி ஆசிரியர்கள் வழங்கினார்கள்.
தூத்துக்குடி 2020 மே 21; தூத்துக்குடியில் 350 நபர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை,திருக்குடும்ப தமிழ் நடுநிலையப்பள்ளி ஆசிரியர்கள் வழங்கினார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கால்டுவெல் காலணி,திருக்குடும்ப தமிழ் நடுநிலையப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து அவர்களது பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் குடும்பங்களின் நலன் கருதி சுமார் 350.நபர்களுக்கு ரூ 1 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை,தூத்துக்குடி திருக்குடும்ப தமிழ் நடுநிலையப்பள்ளி தாளாளர் வில்லியம் சந்தானம் ஆலோசனையின் பெயரில் திருக்குடும்ப தமிழ் நடுநிலையப்பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியமேரி தலைமையில் ஏழை,எளிய மக்களுக்கு அரிசி, உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள், இந்த நிகழ்ச்சியில் பெற்றோர், ஆசிரியர்கள், அருட்சகோதரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.