Onetamil News Logo

புயல் சின்னம் எதிரொலி ; தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் இன்று மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை 

Onetamil News
 

புயல் சின்னம் எதிரொலி ; தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் இன்று மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை 


தூத்துக்குடி மார்ச் 12 ;புயல் சின்னம் எதிரொலி ; தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் இன்று மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.                                                                                                                              
  தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையின் தென்பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளதாகவும், அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி தமிழகம் மற்றும் கேரளம், இலங்கை பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அசாதாரண நிலையில் நகர்வதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் மீன்வளத் துறையினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கெனவே, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும், 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. தங்கு கடலில் இருந்த மீனவர்களையும் உடனடியாக கரை திரும்பும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மீன்வளத் துறை இணை இயக்குநர் அமல்சேவியர் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏறத்தாழ 4 ஆயிரம் நாட்டுப்படகுகளும், 400 விசைப்படகுகளும் உள்ளன. பெரும்பாலான படகுகள் நேற்று மாலை வரை கரை திரும்பிவிட்டன. தொடர்ந்து, 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்ற அறிவிப்பால் இன்று திங்கள்கிழமையும் (மார்ச் 12) மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோரக் காவல் படை, கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் ஆகியோருடன் இணைந்து கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.புயல் சின்னம் எதிரொலியாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் திங்கள்கிழமை (மார்ச் 12) மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo