Onetamil News Logo

வேப்பலோடை அன்னை தெரசா கிராம பொதுநலச் சங்கத்தின் சார்பில் மரக்கன்று நடப்பட்டது.   

Onetamil News
 

வேப்பலோடை அன்னை தெரசா கிராம பொதுநலச் சங்கத்தின் சார்பில் மரக்கன்று நடப்பட்டது.   


தூத்துக்குடி,2019 டிசம்பர் 5 ; வேப்பலோடை அன்னை தெரேசா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்று நடப்பட்டது.வேப்பலோடை அன்னை தெரசா கிராம பொதுநலச் சங்கத்தின் செயலர் ஜேம்ஸ் தலைமையில் நடந்தது. 
வேப்பலோடை அன்னை தெரசா கிராம பொதுநலச் சங்கத்தின் செயலர் ஜேம்ஸ் செயல்பாடுகள் பற்றி கூறியதாவது ;
1. அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஐ.டி.ஐ.க்கு என்.எல்.சி.சார்பில் சுற்றுச்சுவர் கட்ட ரூ 65 லட்சம் ஒதுக்கப்பட்டது.அதன் தொடக்க விழா.அன்று அன்னதானம் வழங்கப்பட்டது.
2. கல்வித்தந்தை ஏ.பி.கே ஆறாம் ஆண்டு நினைவு தினம்.
3. சுதந்திர தின விழா.
4. சங்க,நூலக ஆண்டு விழா.
5. சங்கத்தின் சார்பில் பள்ளி,ஐ.டி.ஐ.,மருத்துவமனை இவைகளில் 500 மரக்கன்றுகள் நட்டி,பராமரித்தல்.மருத்துவமனையில் சொட்டு நீர் பாசனம் மற்றும் அடைப்புக்கு ரூ 23 ஆயிரம் செலவு.
6.டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு,சாலை விழிப்புணர்வு நோட்டீஸ் அடித்து விழிப்புணர்வு.
சங்கத்திற்கு சகோதரர் மோகன் சார்லஸ் மைக் 2,ஸ்டாண்ட்1 வாங்கித் தந்துள்ளார்.அத்துடன் மரக்கன்று வைப்பதற்கு JCB கூலி கொடுத்துள்ளார்.சுற்றுச்சுவர் தொடக்க விழா நடந்தது.
என்.எல்.சி.மூலம் பள்ளி,ஐ.டி.ஐ.இவைகளுக்கு ரூ 65 லட்சம் செலவில் சுற்றுச் சுவர் கட்டி முடிக்கப்பட்டு விட்டது.இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மூலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 3 டாய்லட்,2 R.O.Plant ரூ 20 லட்சம் செலவில் கட்டப்போகின்றார்கள்.அடுத்து பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூம்,சி்சிடி கேமிரா,சைக்கிள் ஸ்டாண்ட் ஆகியவற்றிற்கும்,ஐ.டி.ஐ.க்கு டாய்லட்,சைக்கிள் ஸ்டாண்ட்,R.O. பிளான்ட் ஆகியவற்றிற்கும் முயற்சி எடுத்து வருகின்றோம்.சங்க உறுப்பினர்களும் இதற்கு முயற்சி எடுத்து ஆலோசனை கூறலாம்.தேசிய வங்கி,மருத்துவமனைக்கு 30 படுக்கை,பள்ளிக்கு கணினி ஆசிரியர்,வணிகவியல் ஆசிரியர்,உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க போராடி வருகின்றோம்.விவசாய சம்மந்தமாக மண் பரிசோதனை, குளம் தண்ணீர் வரத்து கால்வாய் தூர் வார இதற்கும் முயற்சி எடுக்கவிருக்கின்றோம்.இந்த ஆண்டில் நூலகத்திற்கு 19 புரவலர்கள் சேர்த்துள்ளோம்.நூலகத்தின் மொத்த புரவலர்கள் 373. இது தமிழகத்தில் கிளை நூலகங்களில் அதிகமானதாகும்.
அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 25 புரவலர்கள் இந்த ஆண்டு சேர்த்துள்ளோம்.பள்ளியின் மொத்த புரவலர்கள் எண்ணிக்கை 61 ஆகும்.
இது போக மாதம்தோறும் விழிப்புணர்வு கூட்டங்கள்,மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு புத்தகப் பரிசு வழங்கி வருகின்றோம்.புத்தகங்கள் சென்னையிலிருந்து  பார்வதி ஜாண்சன்,டாக்டர் காயத்திரி மேடம்,லட்சுமிகாந்தன்,பொன்ராஜ் அண்ணன் ஆகியோர் வாங்கி அனுப்பினர்.
சங்கத்தின் அனைத்து வரவு செலவுகள் முறையாக பதிவு செய்யப்பட்டு வருகின்றது.இச்சங்க வளர்ச்சிக்கு அநேக பெரியவர்கள்,ஆசிரியர்கள்,சமூக ஆர்வலர்கள் நல்ல ஆலோசனை கூறி எங்களை சரியான பாதையில் நடத்த தூண்டுகிறதற்கு மிக்க நன்றி.என்ன நோக்கத்திற்காக சங்கம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை ஈடேற்றும் வகையில் இச்சங்கம் செயல்பட்டு வருகிறது.எங்களின் நோக்கத்தை செயல் இழக்க செய்யும் வகையில் பலவேறு விமர்சனங்கள் எங்களை காயப்படுத்தி,சோர்வுறச்செய்தாலும் உடன் அதிலிருந்து மீள கடவுள் உதவி செய்து வருகின்றார்.நாங்கள் எதாவது தவறு செய்திருப்பின் சுட்டிக்காட்டினால் உடன் திருத்திக்கொள்ள தயாராய் இருக்கின்றோம்.நல் ஆலோசனை கூறினால் ஏற்றுக்கொள்ள தயாராய் இருக்கின்றோம்.எங்கள் நோக்கமெல்லாம் கிராமத்திற்கு, சமுதாயற்கு நேர்மையுன் பணி ஆற்ற வேண்டும் என்பதுதான்.அநேக சங்க உறுப்பினர்கள் ஒவ்வொரு நிகழ்விற்கும் நன்கொடை வழங்கி வருகின்றீர்கள்.அனைத்துக்கும் ரசீது போடப்பட்டு,முறையான கனக்கு வைக்கப்பட்டுள்ளது.சங்கத்தில் மாலை மாணாக்கர்களுக்கு இலவச டீயூசன் அளிக்கப்பட்டுவருகின்றது்.கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்க்கு மாதம் ஆயிரம் வழங்க யாராவது முன் வந்தால் தகவல் கொடுங்கள்.ஒரு கிராமத்தின் வளர்ச்சி என்பது கூட்டு முயற்சி.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo