Onetamil News Logo

75 தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ;தூடி கலெக்டர் 700 பேருக்கு  வேலைவாய்ப்புக்கான கடிதங்களை வழங்கினார்

Onetamil News
 

75 தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ;தூடி கலெக்டர் 700 பேருக்கு  வேலைவாய்ப்புக்கான கடிதங்களை வழங்கினார்


தூத்துக்குடி 2019 ஜூலை 20 ;தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய 75 தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  700 பேருக்கு தனியார் வேலைவாய்ப்புக்கான கடிதங்களை வழங்கினார்கள்.
 
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய 75 தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (20.07.2019) நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  கலந்துகொண்டு, 17 மாற்றுத்திறனாளிகள் உள்பட 700 பேருக்கு தனியார் வேலைவாய்ப்புக்கான கடிதங்களை வழங்கினார்கள்.  
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடத்தப்படுகிறது. மாவட்ட அளவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் ஆண்டுக்கு 3 முறை இதுபோன்ற தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் படித்து முடித்தவுடன் சிறந்த வேலைவாய்ப்பு பெற வேண்டும், பெற்றோர்களுக்கு உதவ வேண்டும், சுய சார்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகளில் பயின்று லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் வெளியேறுகின்றனர். இவர்கள்  பெரும்பாலானோர் அரசு பணியில் சேர வேண்டும் என்று விருப்பமாக கொண்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்குவதற்கு அரசு துறைகளில் பணியிடம் காலியாக இருப்பதில்லை. நமது நாட்டில் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளது. தொழில் வளர்ச்சியும் சிறப்பாக உள்ளது. தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு ஆட்கள் தேவை என்பது அதிக அளவில் உள்ளது. எனவே இளைஞர்கள் தங்களது தனித்திறமைகளை வளர்த்து இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்கள் கல்வி சான்றுகளை மட்டுமே வைத்து வேலைக்கு தேர்வு செய்யமாட்டார்கள். நேர்முக தேர்வின்போது கேட்கப்படும் கேள்விகளை பொறுத்து திறமை அடிப்படையில் மட்டுமே பணிக்கு ஆட்களை தேர்வு செய்வார்கள். ஆகவே இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களி;ல் பங்கேற்பதால் தனியார் நிறுவனங்ள் எந்தெந்த முறையில் ஆட்களை தேர்வு செய்கிறார்கள் என்ற அனுபவமாக கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்களில் நேரடியாக மனுக்கள் கொடுத்தும் வேலைவாய்பப்பினை பெறலாம்.  
இன்று நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 1300 ஆண்கள், 1950 பெண்கள் உள்பட 3,250க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதில் 17 மாற்றுத்திறனாளிகள் உள்பட 700 பேருக்கு தனியார் வேலைவாய்ப்புக்கான கடிதங்கள் பெற்றுள்ளனர். இம்முகாமில் தேர்வு பெறாதவர்கள் இதனை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு அடுத்த வேலைக்கு தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு பெற்றவர்கள், வேலைக்கு செல்லும் இடங்கள் தூரம், பெற்றோர்கள் சொன்னார்கள் என்று கூறி வேலைக்கு செல்லாமல் இருக்கக்கூடாது. வேலைக்கு சென்று அதனை ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  எப்பகுதியில் பணி நியமனம் கிடைத்தாலும் அங்கு சென்று பணிபுரிய வேண்டும். தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்ட அனைவரும் இதனை அனுபவமாக எடுத்து பயிற்சி செய்ய வேண்டும். சுயதொழில் துவங்க விருப்பமுள்ளவர்களுக்கு நீட்ஸ், முத்ரா மற்றும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் கடன் உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்; மூலம் கடன் பெற்று தொழில் தொடங்கி அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர்  பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்(பொது) பேச்சியம்மாள், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு, மற்றும் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo