Onetamil News Logo

ரயில்வே திட்டங்களுக்கு குறைந்த நிதி ஒதுக்கீடு ;தமிழகத்தில் எந்த ஒரு புதிய ரயில்வே திட்டமும் இல்லை 

Onetamil News
 

ரயில்வே திட்டங்களுக்கு குறைந்த நிதி ஒதுக்கீடு ;தமிழகத்தில் எந்த ஒரு புதிய ரயில்வே திட்டமும் இல்லை   


தூத்துக்குடி 2019 ஜூலை 12 ;  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த வெள்ளிகிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ரயில்வே அமைச்சர் ரயில்வேதுறை வளர்ச்சிக்காக 50 லட்சம் கோடிகள் தேவை என நிதிஅமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இந்த பட்ஜெட்டில் ரயில்வேத்துறைக்கு 65,837 கோடிகள கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.  இவ்வாறு தாக்கல் செய்யும் போது ரயில்வே திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு போன்ற விபரங்கள்  அன்று வெளியிடப்படவில்லை. இந்த வாரம் ரயில்வே வாரியம் தங்கள் இணையதளத்தில் ரயில்வே திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, புதிய திட்டங்கள் எதாவது அறிவிக்கப்பட்டுள்ளதா போன்ற விபரங்களை வெளியிட்டுள்ளது. 
  தமிழ்நாடு இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அளவில் ஜிடிபியில் மூன்றாவதும், மக்கள் தொகை அடிப்படையில் அறாவது இடத்திலும் உள்ள மாநிலம் ஆகும். தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 4027.08 கி.மீ தூரத்துக்கு ரயில்வே இருப்புபாதை வழித்தடங்கள் உள்ளது. இந்த ரயில்பாதைகளை சென்னையில் தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வே மண்டலம் வழியாக சென்னை, மதுரை, திருச்சி, சேலம் கோட்டங்கள் வழியாக நிர்வகிக்கப்படுகிறது.  ரயில்வேத்துறை வளர்ச்சி என்றால் புதிய வழித்தடங்களில் இருப்புபாதை வழித்தடங்கள் அமைத்தல், ஒரு வழிபாதையாக உள்ள பாதைகளை இருவழிபாதையாக மாற்றம் செய்தல், மின்மயமாக்கல், மீட்டர் கேஜ் பாதைகளை அகல பாதையாக மாற்றம் செய்தல், ரயில்வே சம்மதமான தொழிற்சாலைகள் அமைத்தல் ஆகியவற்றை ரயில்வேதுறை வளர்ச்சி என்று கூறலாம்.  இந்த வருடம் அறிவித்த மற்ற திட்டங்கள் அனைத்தும் தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது என்ற சொல்லுக்கு ஏற்ப வடஇந்தியாவுக்கே அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்அடர்த்தி:      மக்கள்தொகை அடர்த்தியை போன்று ரயில் அடர்த்தியையும் கணக்கிட்டு வருகின்றார்கள். தமிழகம்  அகில இந்திய அளவில் வளர்ச்சியில் இரண்டாவது பொரிய மாநிலம் ஆகும். இந்த ரயில்அடர்த்தி என்பது 1000 சதுர கி.மீ பரப்பளவில் எவ்வளவு ரயில்வே இருப்புபாதைகள் உள்ளன என்பதை கணக்கிடுவது ஆகும். தமிழ்நாடு தற்போது 32.07 ரயில் அடர்த்தி உள்ளது. இதை படிபடியாக 50 வரை அதிகரிக்க வேண்டும். உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, பீகார், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்தை விட  முன்னில் உள்ளன. தமிழகம் மத்திய அரசுக்கு செலுத்தும் வரிவருவாயில் இரண்டாம் இடத்தில் உள்ளன. வரிவருவாயில் இரண்டாம் இடத்தில் உள்ளதை போன்று ரயில்அடர்த்தியிலும் இரண்டாம் இடத்துக்கு வரவேண்டும். இதற்கு குறைந்தபட்சம் வருடத்துக்கு ஒரு புதிய இருப்புபாதை திட்டத்தையாவது செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகம் வளாச்சி பாதையில் செல்லும். 
 தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் திட்டங்கள்:
புதிய ரயில்பாதைகள்
1. மதுரை – தூத்துக்குடி  வழி அருப்புகோட்டை 143.5 கி.மீ   - 30 கோடிகள்
2. திண்டிவனம் - செஞ்சி – திருவண்ணாமலை 70 கி.மீ     - 10 கோடிகள்
3. திண்டிவனம் - நகரி 179.2 கி.மீ      - 7 கோடி 87 லட்சங்கள்
4. அத்திபட்டு – புத்தூர் -88.30 கி.மீ      - 2 கோடி
5. ஈரோடு – பழநி 91.05 கி.மீ     - 10 லட்சங்கள்
6. சென்னை  - கடலூர் வழி மகாபலிபுரம்  179.28 கி.மீ - 10 லட்சங்கள்
7. ஸ்ரீபெரும்புர்}ர் - கூடவாஞ்சேரி – 60 கி.மீ   10 லட்சங்கள்
8. மொரப்பூர்  - தர்மபுரி – 36 கி.மீ   - 10 லட்சங்கள்
9. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி - 1 லட்சம்
 கேரளாவில் உள்ள அங்கமாலி – சபரிமலை 116 கி.மீ , குரூவாயூர் - திருநாயவா 35 கி.மீ என இரண்டு திட்டங்களுக்கும் சேர்த்து மொத்தம் 11 புதிய இருப்புபாதை திட்டங்களுக்கு 52 கோடியே 28 லட்சங்கள் 95 ஆயிரம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
இருவழிபாதை பணிகள்
1. விழுப்புரம் - திண்டுக்கல் 
2. தஞ்சாவூர் - திருச்சி பொன்மலை
3. கன்னியாகுமரி – திருவனந்தபுரம்
4. மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி
5. மணியாச்சி – நாகர்கோவில்
அகலபாதையாக மாற்றும் பணிகள்                                                                                   1. வேளாங்கண்ணி – திருத்துறைபூண்டி 
2. காரைக்கால் - பேரளம்
3. புனலூர் - செங்கோட்டை
4. திருவாரூர் - காரைக்குடி
5. திருத்துறைபூண்டி – அகஸ்தியம்பள்ளி
6. நீடாமங்கலம் - மன்னார்குடி
7. மன்னார்குடி – பட்டுகோட்டை
8. தஞ்சாவூர் -பட்டுகோட்டை
9. மதுரை – போடி
கன்னியாகுமரி -திருவனந்தபுரம் இருவழிபாதை ;
 கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வரை உள்ள 85கி.மீ பாதையை இருவழிபாதையாக மாற்ற 900 கோடிகள் கொண்ட திட்டத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒப்புதல் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு இந்த பட்ஜெட்டில் 138 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள கட்டுமான நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது முதல்முன்னுரிமையான கன்னியாகுமரி – நாகர்கோவில் பகுதி பணிகள் விரைவாக நடைபெற்று இந்த வருட இறுதிக்குள் இருவழிபாதை ரயில் பயணிகள் போக்குவரத்துக்கு திறக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. 
திட்ட விபரம் ;
1. திருவனந்தபுரம் - கன்னியாகுமரி - 87 கி.மீ
2. முதல் சர்வே – 2005-06
3. முதல் சர்வே ரேட் ஆப் ரிட்டன் -0.77 சதமானம்
4. முதல் சர்வே மதிப்பீடு - 526 கோடிகள்
5. இரண்டாம் சர்வே - 2013-14
6. இரண்டாம் சர்வே ரேட் ஆப் ரிட்டன் 7.03 சதமானம்
7. இரண்டாம் சர்வே மதிப்பீடு - 617 கோடிகள்
8. திட்டம் செயல்படுத்த அறிவிக்கப்பட்ட ஆண்டு- 2015-16
9. நிதிஆயோக்கின் ஒப்புதல்  - 26-04-2017
10. மந்திரிசபை ஒப்புதல் - 2-8-2017
11. திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியது – 23-01-2018
12. மொத்த திட்ட மதிப்பீடு - 1இ431.90 கோடிகள்
13. அனுமதிக்கபட்ட திட்ட மதிப்பீடு – 900 கோடிகள்
14. 2017-18 ஆண்டு நிதி ஓதுக்கீடு – 92 லட்சங்கள்
15. 2018-19 ஆண்டு நிதி ஓதுக்கீடு – 100 கோடியே பத்து லட்சங்கள்
16. 2019-20 ஆண்டு நிதி ஒதுக்கீடு – 138 கோடிகள்
நாகர்கோவில் - மதுரை இருவழிபாதை ; நாகர்கோவிலிருந்து மதுரை வரை உள்ள பாதையை இருவழிபாதையாக மாற்ற மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி 159 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோவில் 102 கி.மீ தூரம் ஒரு திட்டமாக என இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி பாதை பணிகளின் திட்ட மதிப்பீடு 1,182.31 கோடிகள் எனவும், நாகர்கோவில் - மணியாச்சி பாதை திட்ட மதிப்பீடு 1,003.94 கோடிகள் ஆகும். இந்த திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நாகர்கோவில் - மணியாச்சி இருவழிபாதை பணிகளுக்காக 183 கோடியே 50 லட்சமும், மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி திட்டத்துக்கு 169 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை மிகவும் குறைவு ஆகும். இந்த திட்டத்தை ரயில்வேதுறையின் கீழ் உள்ள பொதுதுறை நிறுவனமான ஆர்விஎன்எல் நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
திட்ட விபரம் ;                                                                                                                             1. சர்வே அறிவிக்கப்பட்ட ஆண்டு – 2012-13
2. சர்வேயின் படி திட்ட மதிப்பீடு - 1926 கோடிகள்
3. திட்ட தூரம் - 159  + 102 -  261 கி.மீ
4. ரேட் ஆப் ரிட்டன் வருவாய்- 8.095 சதமானம்
5. திட்டம் செயல்படுத்த அறிவிக்கப்பட்ட ஆண்டு- 2015-16
6. நிதிஆயோக்கின் ஒப்புதல்  - 26-04-2017
7. மந்திரிசபை ஒப்புதல் - 2-8-2017
8. திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியது – 23-01-2018
9. 2017-15 ஆண்டு நிதி ஒதுக்கீடு – 39.5 கோடிகள்
10. 2018-19 ஆண்டு நிதி ஓதுக்கீடு – 75+75 - 150 கோடிகள்
11. 2019-20 ஆண்டு நிதி ஓதுக்கீடு – 169+183  - 352 கோடியே 50 லட்சங்கள் 
புதிய திட்டங்கள்:- ரயில் பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு வேண்டி புதிய ரயில் பாதை திட்டங்களை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. தற்போது நடைபெற்றுவருகின்ற திட்ட பணிகள் அனைத்தும் முடிந்தபிறகே புதிய பாதை பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, தொழில்வளர்ச்சியில்லாமை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் தென்தமிழகத்தின் பல மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. போதிய வேலைவாய்ப்பு வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சென்னை, மும்பை மற்றும் பெங்களுர் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள ரயில்பாதைகள் ஆங்கிலேயர் காலத்திலே அமைக்கப்பட்டது ஆகும். இந்தியா சுதந்திரம் கிடைத்தது முதல் குமரி மாவட்டம் தவிர உள்ள தென்மாவட்டங்களில் ஒரு கி.மீ தூரம் கூட புதிதாக ரயில்பாதை வழித்தடம் இதுவரை அமைக்கவில்லை. குமரி மாவட்டத்தில் திருநெல்வேலி – நாகர்கோவில்  74 கி.மீ புதிய அகல ரயில்பாதை 08-04-1981-ம் தேதியும், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் 87 கி.மீ புதிய அகல ரயில்பாதை – 15-04-1979 அன்றும் அமைக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இந்த இரண்டு பாதைகளையும் சேர்த்து தென்தமிழக எல்லைக்குள் 1947க்கு பிறகு மொத்தம் 131 கி.மீக்கு மட்டுமே புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இதுவரை எந்த ஒரு புதிய பாதையும் தென்மாவட்டங்களில் அமைக்கப்படவில்லை. 
கன்னியாகுமரியிலிருந்து காரைக்குடி வரை கடற்கரை வழியாக புதிதாக இரயில் பாதை 
   கன்னியாகுமரியிலருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை,  ராமநாதபுரம் வழியாக காரைகுடி வரை புதிய ரயில்வே இருப்புபாதை தடம் அமைக்க 2008-09 ரயில் நிதிநிலை அறிக்கையில் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணி செய்ய அறிவிக்கப்பட்டது. காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 34 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 462.47 கி.மீ தூரத்தில் 1965.763 கோடிகள் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று சமர்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த ரயில் பாதை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவிலலை. 
ஆளுரிலிருந்து நாகர்கோவில் வழியாக செட்டிகுளத்துக்கு 24 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதை
  குமரி மாவட்டத்தில் உள்ள அளுரிலிருந்து நாகர்கோவில் வழியாக நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகில் உள்ள செட்டிகுளத்துக்கு 24 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணிக்கு கடந்த 2013-ம் ஆண்டு ரயில்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. குமரி மாவட்ட வளர்ச்சிக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோரிக்கையை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை
சங்கரன்கோவில் - திருநெல்வேலி புதிய பாதை:திருநெல்வேலியிருந்து சங்கரன்கோவிலுக்கு 160 கி.மீக்கு புதிய ரயில் பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணிக்கு கடந்த 2013-ம் ஆண்டு ரயில்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கூடுதல் ரயில்வழித்தடம் அமைக்க இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நெல்லை மாவட்ட பயணிகள் எதிர்பார்த்தனர் ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo