Onetamil News Logo

அனிதா ராதாகிருஷ்ணன் என்ன? ஆனார் : செயல்படாமல் இருக்கும் தூத்துக்குடி, திமுக தெற்கு மாவட்டம் தொண்டர்கள் புலம்பல் 

Onetamil News
 

அனிதா ராதாகிருஷ்ணன் என்ன? ஆனார் : செயல்படாமல் இருக்கும் தூத்துக்குடி, திமுக தெற்கு மாவட்டம் தொண்டர்கள் புலம்பல் 


தூத்துக்குடி ,2019 செப் 12 ;அனிதா என்ன? ஆனார் : செயல்படாமல் இருக்கும் தூத்துக்குடி, திமுக தெற்கு மாவட்டம் தொண்டர்கள் புலம்பி வருகின்றனர். 
    திமுக முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி இருக்கும்போதே வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சுப்பிரமணியன் என்றும் தெற்கு மாவட்டம் பெரியசாமி என்றும் பிரிக்கப்பட்டது.அதன் பின்னர் பெரியசாமி மறைந்ததையொட்டி தூத்துக்குடி மாவட்டம், திமுக  தெற்கு,தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் வடக்கு என்று பிரித்து அதற்க்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன்,திருச்செந்தூர், திருவைகுண்டம், ஒட்டபிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் என்று பிரிக்கப்பட்ட்டது.                                 
திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் பெரியசாமி. பல ஆண்டுகாலமாக இவர் இந்த பதவியை வகித்து வந்தார். திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த பெரியசாமி உடல்நலக்குறைவால்  காலமானார். இதனால் தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு காலியானது. ஏற்கெனவே மாவட்டச் செயலாளர் பதவியை பெறுவது தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், பெரியசாமிக்கும் இடையே கடும் போட்டிநிலவியது. இதில் பெரியசாமியே வெற்றி பெற்றார்.
தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பதவியில் பெரியசாமி கோலாேச்சியதால் அனிதா ராதாகிருஷ்ணன், மீண்டும் அதிமுகவில் சேரப்போவதாக தகவல் வெளியானது. ஆனால், அவரை சந்திக்க ஜெயலலிதா மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அப்போது, "திமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும், அதிமுகவில் நான் சேரப்போவதாக வந்த தகவல் முற்றிலும் தவறானது" என்று மறுத்தார்.
 தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக கீதா ஜீவன்,அவரது பணியை செய்து வருகிறார்.
ஆனால் திருச்செந்தூர், திருவைகுண்டம், ஒட்டபிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கடந்த பல மாதங்களாக அவர் எங்கிருக்கிறார் என்று தொண்டர்களுக்குத் தெரியாமல் அந்த பகுதியில் நடைபெறும் திமுக சார்ந்த பணிகள் தொய்வடைந்து இருப்பதாக திமுக தெற்கு மாவட்ட தொண்டர்கள் புலம்புகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo