Onetamil News Logo

தூத்துக்குடி ஒப்பந்தக்காரர்கள் சங்கம் சார்பில் வேலை வாய்ப்பு கோருதல் மற்றும் ஸ்டெர்லைட் போன்ற பெரு நிறுவனங்களை திறக்கக் கோரி சேகரித்த 1000 ஆதரவு மனுக்களை சமர்பித்தல்

Onetamil News
 

தூத்துக்குடி ஒப்பந்தக்காரர்கள் சங்கம் சார்பில் வேலை வாய்ப்பு கோருதல் மற்றும் ஸ்டெர்லைட் போன்ற பெரு நிறுவனங்களை திறக்கக் கோரி சேகரித்த 1000 ஆதரவு மனுக்களை சமர்பித்தல்


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 13 ;தூத்துக்குடி ஒப்பந்தக்காரர்கள் சங்கம் சார்பில் வேலை வாய்ப்பு கோருதல் மற்றும் ஸ்டெர்லைட் போன்ற பெரு நிறுவனங்களை திறக்கக் கோரி சேகரித்த 1000 ஆதரவு மனுக்களை தமிழக முதலமைச்சருக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வழியாக இன்று சமர்பித்தனர். 
Covid-19 பெருந்தொற்று காரணமாக பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மையால் வாழ்வாதாரம் பாதிக்கபட்டது மற்றும் இந்த துயர் தீர்க்க பெரு நிறுவனங்களை செயல்பட அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர்கள் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியதாவது.....Covid-19 பெருந்தொற்று காரணமாக நாடு முழுமையும்  மற்றும் தமிழகம் முழுவதும் அவ்வப்போது நடந்த தொடர் போராட்டம்  காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு தொழில் வளர்ச்சி முடங்கி போயுள்ளது.  முக்கியமாக தென் தமிழ் மாவட்டங்களில் வேலையின்மை மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அரசாங்கம் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டாலும் தென் தமிழகத்தில் எந்த புதிய திட்டமும் தொடங்கப்படவில்லை. இயங்கி கொண்டிருந்த பல மின் நிறுவனங்களும், STERLITE தொழிற்சாலையும் மூடப்பட்ட பின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் பல ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் சாதி சண்டைகளுக்கும் மற்ற குற்றங்களும் அதிகரித்து பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. தூத்துக்குடியில் பொருளாதாரம் இங்குள்ள தொழிசாலைகளையே நம்பி உள்ளது.
வேலை இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து வாடும் எங்களின் துயர் தீர்க்க, STERLITE உள்ளிட்ட பெரு நிறுவனங்களை  திறந்து மீண்டும் செயல்பட வைக்க தாங்கள் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo