Onetamil News Logo

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு விலையில்லா சோப், மாஸ்க், சானிடேஷர், கிளீனர் ஆயில் ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.ஏ. ஆறுமுகநயினார் வழங்கினார்.

Onetamil News
 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு விலையில்லா சோப், மாஸ்க், சானிடேஷர், கிளீனர் ஆயில் ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.ஏ. ஆறுமுகநயினார் வழங்கினார்.


தூத்துக்குடி 2020 மார்ச் 28 ;கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டு வரும்   வருவாய் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்களுக்கு விலையில்லா நூற்றுக்கும் மேற்பட்ட சோப், மாஸ்க், சானிடேஷர், கிளீனர் ஆயில் ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்களின் சார்பில் அறிஞர் அண்ணா அறக்கட்டளை தலைவர் பி.ஏ.ஆறுமுகநயினார் தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் செல்வகுமாரிடம் வழங்கினார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும், அத்தியாவசிய அரசு பணிகளை மேற்கொள்ளும் அலுவலர், பணியாளர்களுக்கும் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கும் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஃபேஸ் மாஸ்க், சானிடேஷர் தேவையிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு 100 மேற்பட்ட விலையில்லா ஃபேஸ் மாஸ்க், சானிடேஷர், கை கழுவும் சோப் திரவம் உள்ளிட்டவைகளை அறிஞர் அண்ணா அறக்கட்டளையின் சார்பில் ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவரும்,முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளருமான பி.ஏ.ஆறுமுகநயினார் தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் செல்வகுமாரிடம் வழங்கினார். அந்த பொருட்கள் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்களுக்கு தனித்தனியாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக மாநில பேச்சாளர் கருணாநிதி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் சந்தனபட்டு, நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைத் தலைவர் சகாயராஜா ஆகியோர் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo