Onetamil News Logo

 செய்துங்கநல்லூர்,   சின்னார்குளம் அம்மன்கோயில் கொடைவிழா 

Onetamil News
 

 செய்துங்கநல்லூர்,   சின்னார்குளம் அம்மன்கோயில் கொடைவிழா  


செய்துங்கநல்லூர், 2018 செப். 13:  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட செய்துங்கநல்லூர், சின்னார்குளம் அம்மன்கோயில் கொடைவிழா  நடைபெற்றது.
சேரகுளம் அருகே உள்ள சின்னார்குளம் வெங்கடேச பிரசன்ன பெருமாள் மற்றும் அம்மன்கோயில்  கொடை விழா நடந்தது. இதையொட்டி கடந்த 8 ந்தேதி மாலை குடியழப்பு நடந்தது. 9 ந்தேதி காலையில் தீர்த்தம் எடுத்து வந்து , கலச பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு சுவாமி எழுந்தருளல் கும்பம் ஏற்றுதல் போன்ற நிகழ்ச்சி நடந்தது.  10 ந்தேதி  வெங்கடேச பிரசன்ன பெருமாள்கோயிலுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம், சிறப்பு பூஜை தீபாரதனை நடந்தது.
  11 ந்தேதி அம்மன் கோயிலுக்கு கொடை விழா நடந்தது. இதையொட்டி மஞ்சள் பானை போடுதல் என்னும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கொதிக்கும் மஞ்சள் தண்ணீரை சாமியாடிகள் தலையில்  தெளித்து ஆடி பரவசத்தினை ஏற்படுத்தினர்.
 இரவு  சாமக்கொடை நடந்தது. மறு நாள் காலை படப்பு பிரித்தல்  நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டினர் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo