தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கை
தூத்துக்குடி 2021 ஜனவரி 13 ; தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
● மாவட்டத்தில் உள்ள அணைகள் குளங்கள் அனைத்தும் நிரம்பும் சூழ்நிலை உள்ளதால், யாரும் அணைகளுக்கு செல்ல வேண்டாம். தாமிரபரணி ஆற்றில் மிக அதிக அளவு வெள்ளம் வருவதால் ஆற்றுப்பகுதி அருகில் வசிக்கும் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
● அணைகள், ஆறு, ஏரி,குளம் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்றவற்றில் வரும் தண்ணீரை வேடிக்கை பார்க்கவோ, குளிக்கவோ குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்.
● மழைக்காலத்தில் மின்சார விளக்குகளை போடுகையில் கவனமுடன் இருக்க வேண்டும்.
● டிவி டிஸ் ஆன்டனா, ஸ்டே ஒயர் மற்றும் கேபிள் டிவி ஒயர்களை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம்.
● சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவை குழந்தைகளுக்கு தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
● மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும்.
● குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் பழைய பழுதான சுவிட்சுகளை பயன்படுத்த வேண்டாம்.
● மின் கம்பத்திலோ, அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம்.
● மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே குழந்தைகளோ, பெரியவர்களோ யாரும் செல்ல வேண்டாம்.
● மழை, புயல் காலங்களில் மின்சாரப் பிரச்சினை எதுவாக இருந்தாலும் மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.
● இடி, மின்னல் ஏற்படும்போது டிவி உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்.,மின்கம்பங்கள், மரங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும்.
● மழைக்காலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.