Onetamil News Logo

800 எக்டேர் உளுந்து, பாசிப்பயிறு, வெள்ளைச் சோளம், மக்காச்சோளம் மற்றும் மிளகாய், வெங்காயம், கரும்பு போன்ற பயிர்கள் சேதம் 

Onetamil News
 

800 எக்டேர் உளுந்து, பாசிப்பயிறு, வெள்ளைச் சோளம், மக்காச்சோளம் மற்றும் மிளகாய், வெங்காயம், கரும்பு போன்ற பயிர்கள் சேதம் 


தூத்துக்குடி 2021 ஜனவரி 12; 800 எக்டேர் உளுந்து, பாசிப்பயிறு, வெள்ளைச் சோளம், மக்காச்சோளம் மற்றும் மிளகாய், வெங்காயம், கரும்பு போன்ற பயிர்கள் சேதம்  அடைந்து இருப்பதாக விவசாய பெருமக்கள் மாவட்ட கலெக்டர் யிடம் புகார் தெரிவித்துள்ளனர். 
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் ஆற்றங்கரை ஊராட்சி துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சேதமடைந்த மற்றும் கருகிய பயிர்களுடன் இழப்பீடு கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், விளாத்திகுளம் வட்டம் ஆற்றங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட துரைசாமிபுரம், சொக்கலிங்கபுரம், கந்தசாமிபுரம், தெப்பம்பட்டி, ஆற்றங்கரை ஆகிய ஊர்களில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக பெய்து வரும் கனமழையால் சுமார் 800 எக்டேர் உளுந்து, பாசிப்பயிறு, வெள்ளைச் சோளம், மக்காச்சோளம் மற்றும் மிளகாய், வெங்காயம், கரும்பு போன்ற பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. எனவே இந்த கிராமங்களில் நிலங்களை ஆய்வு செய்த, பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு தரவேண்டுமென்று’ அந்த மனுவில் கூறியிருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo