தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிகளில் 1400 கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி 2018 நவம்பர் 8 ;தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி இன்று (8.11.2018) ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகள்நல பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருந்தகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடுத்தபடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து துறைகளுடன் மருத்துவ வசதிகள் சிறப்பாக உள்ளது. பருவமழை காலத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து களஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் ஒரு குழந்தை அனுமதிக்கப்பட்டு தற்போது தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த குழந்தை நலமுடன் உள்ளது. மேலும், கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு புதிதாக புற்றுநோய் பிரிவு, காய்ச்சல் சிறப்பு பிரிவு (குநஎநச Pயin ஊயடiடிசயவந) ஆகிய இரண்டு பிரிவுகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த மருத்துவமனையில் மத்திய அரசின் மருத்துவக்குழுவினர் தேசிய தரச்சான்றிதழ்கள் வழங்க நேரடி ஆய்வு செய்ய உள்ளனர். தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிகளில் 1400 கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், டெங்கு, பன்றிக்காய்ச்சல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு, தேவையான விழிப்புணர்வு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள் ஆலோசனையின்படி சிகிச்சை பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்தார்.