Onetamil News Logo

நாங்குநேரி  சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகள்மீது தொடர் தாக்குதல் நடத்தும் சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி முற்றுகை

Onetamil News
 

நாங்குநேரி  சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகள்மீது தொடர் தாக்குதல் நடத்தும் சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி முற்றுகை


நாங்குநேரி 2020 ஜனவரி 27 ;நாங்குநேரி  சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகள் மீது தொடர் தாக்குதல் நடத்தும் சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி முற்றுகை செய்தனர்.
நாங்குநேரி சுங்க சாவடியில்  வேலை செய்து வரும் ஊழியர்கள்( ரவுடிகள்) 26/01/20 அன்று காலை பொது மக்கள் மீது நடத்திய தொடர் தாக்குதலை கண்டித்து  27/01/20 இன்று மாலை 4.30 மணியளவில் எஸ்.டி.பி.ஐ கட்சி நெல்லை மாவட்ட பொருளாளர் களந்தை மீராசா தலைமையில்  நாங்குநேரி சுங்க சாவடி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அதில் அவர்  கூறியதாவது.....தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஊழியர்களின் அடாவடி அதிகரித்து வருகின்றது. தற்போது பாஸ்ட்டேக் முறை வந்ததற்கு பின்பாக இந்த அடாவடித்தனம் அதிகரித்துள்ளது. ஊழியர்கள் பெயரில் குண்டர்கள் பணியமர்த்தப்படுவதால் வாகன ஓட்டிகள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். கடந்த வாரம் மதுரை திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்டேக் பாதையில் வந்த ஐயப்ப பக்தர்கள் வந்த வாகனத்தின் ஓட்டுநரையும், அதனைக் தட்டிக்கேட்ட ஐயப்ப பக்தர்களையும் டோல்கேட் குண்டர்களால் தாக்கப்பட்டனர். அதேபோல் நேற்று காலை நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடியில் கேரளாவைத் சேர்ந்த குடும்பத்தினர் வந்த வாகனம் பாஸ்டேக் கேட் வழியாக செல்லாமல் கட்டணம் செலுத்தும் கேட் வழியாக வந்ததற்காக வேண்டுமென்றே அந்த வாகனத்தை நிறுத்திவைத்து சுங்கச் சாவடி ஊழியர்கள் காலதாமதம் செய்துள்ளனர். உரிய கட்டணத்தை பெற்று விரைவாக அனுப்பாமல் ஏன் இழுத்தடிக்கிறீர்கள் என்று வாகனத்தில் வந்தவர்கள் கேள்வி கேட்டதற்காக, அங்கு ஊழியர்கள் போர்வையில் இருந்த குண்டர்கள் வாகனத்தில் வந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் மீதும் இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கொலைவெறி தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்ததோடு, காவல்நிலையத்தில் முறையிட்டு வழக்குப் பதிவும் செய்தனர்.
அதேபோல் இன்று காலை செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டிலும் வாகன ஓட்டிகளுக்கு எதிரான ஊழியர்களின் அடாவடி காரணமாக ஏற்பட்ட கைகலப்பு அங்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.  பாலபாரதி அவர்களிடம், கரூர் மணவாசி சுங்கச்சாவடி ஊழியர்கள் அடாவடி செய்துள்ளனர். முன்னாள் மக்கள் பிரதிநிதிக்கான அனுமதியை மறுத்து துப்பாக்கி வைத்திருந்த ஊழியர்களை கொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இப்படியாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் போர்வையில் குண்டர்கள் பணியமர்த்தப்பட்டு வாகன ஓட்டிகளின் மீது அடாவடி தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. நாங்குநேரி சுங்கசாவடியில் இவ்றான வன்முறை சம்பவங்கள் தொடர்  கதை ஆவதாக  கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த முற்றுகை போரட்டத்தில் மாவட்ட பொது செயாலாளர் பீர் மஸ்தான் மாவட்ட செயலாளர்கள் ஹாயத் முஹம்மது பேட்டை முஸ்தபா முல்லை மஜித் தொகுதி தலைவர் ஏர்வை கனி செயாலாளர் முகைதீன் பாப்புலர் ஃப்ரண்ட மாவட்ட செயலாளர் இம்ரான் அலி பாப்புலர் ஃப்ரண்ட தொகுதி செயாலளர் ஆமின் , அஸ்ரப் ஷாம் ஷாகிப்தின் ஏர்வாடி நகர தலைவர் லண்டன் பீர் களக்காடு நகர தலைவர் காலித் ஆகியோர் கலந்து கொண்டனர் இம் முற்றுகை போராட்டத்தில் தாக்குதல் நடத்திய ஊழியர்கள் மீது  கடுமையான சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தி  கோஷங்கள் எழுப்பட்டன மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பயணம் செல்லும் பயணியர்களுக்கு போல் கேட்டில் பாதுகாப்பு அளிக்க இம் முற்றுகை போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo