Onetamil News Logo

தூத்துக்குடி அருகே தருவைக்குளத்தில் மே மாதம் 28 ம் தேதி  முதல் 30 ம் தேதி  வரை “வனாமி இறால் வளர்ப்பு” குறித்து மூன்று நாள் பயிற்சி 

Onetamil News
 

தூத்துக்குடி அருகே தருவைக்குளத்தில் மே மாதம் 28 ம் தேதி  முதல் 30 ம் தேதி  வரை “வனாமி இறால் வளர்ப்பு” குறித்து மூன்று நாள் பயிற்சி 


 தூத்துக்குடி 2018 மே 14 ;தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி, தருவைக்குளத்தில் “வனாமி இறால் வளர்ப்பு” குறித்த மூன்று நாள் பயிற்சி தொடங்கப்பட உள்ளது
  தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின்  ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி, தருவைக்குளத்தில் மே மாதம் 28.05.2018 முதல் 30.05.2018 ஆம் தேதி வரை “வனாமி இறால் வளர்ப்பு” குறித்த மூன்று நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரு.500/- ஆகும். இப்பயிற்சியில் பல்வேறு முக்கிய பாடங்களான, இந்திய வனாமி இறால் வளர்ப்பில் தற்போதைய நிலை, பினேயஸ் வனாமி யின் உயிரியல், வனாமி இறால்களுக்கான நோய்கள், பண்ணைக்கான இடத்தேர்வு, இருப்பு செய்தல் முறைகள்ம், உணவு மேலாண்மை முறைகள், நீர்த்தர மேலாண்மை முறைகள், அறுவடை முறைகள் மற்றும் பண்ணை உற்பத்திக்கான சிறந்த மேலாண்மை முறைகள் போன்ற பாடங்கள் செயல்முறை விளக்கங்களுடன் நடத்தப்படும். மேலும், பயிற்சியாளர்களுக்கு இறால் பண்ணையில் வைத்து விளக்கங்கள் அளிக்கப்படும். இப்பயிற்சியானது வனாமி இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், சுயதொழிலாக இதனை ஏற்று நடத்த முனைவோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இப்பயிற்சியில் மூன்று நாட்களும் தவறாது கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சியில் கலந்துக்கொண்டதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.  பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள் 25.05.2018க்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி தொடர்பாக மேலும் விவரங்களுக்கு 9994450248, 9994450663 மற்றும் 0416-2340554 ஆகிய தொலைபேசி எண்களிலும்,vijayamirtharaj@tnfu.ac.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். வனாமி இறால் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சியில் கலந்துக்கொண்டு பயன்பெரலாம்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo